முகப்பு
தமிழ்நாடு

பழநியில் இன்று(ஜன. 19) ரோப் கார் சேவை இயங்காது!

பழநி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் கம்பிவட ஊர்தி (ரோப் கார்) சேவை இன்று(வியாழக்கிழமை) ஒருநாள் மட்டும் இயங்காது என கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 6:45 PM
பகிர்:

திண்டுக்கல்: பழநி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் கம்பிவட ஊர்தி (ரோப் கார்) சேவை இன்று(வியாழக்கிழமை) ஒருநாள் மட்டும் இயங்காது என கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. 

திண்டுக்கல் மாவட்டம் பழநியில் மிகவும் பிரசித்தி பெற்ற அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசனம் செய்கின்றனர்.

இந்த கோயிலுக்கு பக்தர்கள் சிரமமின்றி சென்று வருவதற்காக கம்பிவட ஊர்தி (ரோப் கார்) சேவைகள் செய்யப்பட்டுள்ளன. அதிகாலை 4 மணிக்கு தொடங்கும் ரோப் கார் சேவை இரவு பூஜை வரை செயல்படுகிறது. 

இந்நிலையில், மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக ரோப் கார் சேவை இன்று(வியாழக்கிழமை) ஒருநாள் மட்டும் இயங்காது என கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →