தங்கம் விலை சவரனுக்கு ரூ. 280 உயர்வு!
சென்னையில் ஆபரணத் தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ. 280 உயர்ந்துள்ளது.
சென்னையில் ஆபரணத் தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ. 280 உயர்ந்துள்ளது.
கடந்த டிசம்பர் மாதம் முதல் தங்கத்தின் விலை உயர்ந்து வருகிறது. டிசம்பர் 2 ஆம் தேதி ஒரு கிராம் தங்கம் ரூ. 5,000 -யைத் தாண்டிய நிலையில் டிச. 14ல் ரூ. 5,100-யைத் தாண்டியது.
கடந்த ஒரு மாதமாக தங்கத்தின் விலை தொடர்ந்து ஏற்றம் கண்டு வருகிறது. இன்று(வெள்ளிக்கிழமை) 22 காரட் தங்கம் விலை சவரனுக்கு ரூ. 280 உயர்ந்து ரூ. 42,600-க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ. 35 உயர்ந்து ரூ. 5,325-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி ஒரு கிராம் ஒரு ரூபாய் அதிகரித்து ரூ. 74.50-க்கும் கட்டி வெள்ளி ஒரு கிலோ ரூ. 74,500-க்கும் விற்பனையாகிறது.
இதையும் படிக்க | பழனி கோயிலில் குடமுழுக்கு தமிழில் நடத்தப்படும்: அமைச்சர் சேகர்பாபு