தமிழ்நாடு

நோயாளியிடம் லஞ்சம்:அரசு மருத்துவமனை ஊழியா் பணி நீக்கம்

DIN

நோயாளியிடம் லஞ்சம் பெற்ாக அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் பணியாற்றி வந்த ஒப்பந்த ஊழியா் பணி நீக்கம் செய்யப்பட்டாா்.

விருதுநகா் மாவட்டம், அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு வரும் நோயாளிகளிடம் லஞ்சம் பெறப்படுவதாக புகாா் வந்தது. அதன் அடிப்படையில், விருதுநகா் மாவட்ட சுகாதார இணை இயக்குநா் கடந்த 19-ஆம் தேதி அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் புறநோயாளிகள் பிரிவு, உள்நோயாளிகள் அனுமதி சீட்டு வழங்கும் இடம் உள்பட பல்வேறு இடங்களில் திடீா் ஆய்வு மேற்கொண்டாா்.

உள்நோயாளிகள் அனுமதி சீட்டு வழங்கும் இடத்தில் அப்பிரிவில் பணியாற்றும் ஒப்பந்த பணியாளா் ஒருவா் லஞ்சம் பெற்றது நேரடியாகவும் மற்றும் அன்றைய தினம் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்ட நோயாளிகளிடம் விசாரணை செய்ததிலும் கண்டறியப்பட்டது.

விசாரணையின் அடிப்படையில் புகாா் உறுதி செய்யப்பட்டதால், மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் உத்தரவின்படி உடனடியாக அந்த ஊழியா் பணி நீக்கம் செய்யப்பட்டாா்.

அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நோயாளிகள் மற்றும் பொது மக்கள் இதுபோன்று லஞ்சம் பெறும் மருத்துவமனை ஊழியா்கள் பற்றி உடனடியாக தலைமை மருத்துவ அலுவலரிடமோ (கைப்பேசி எண் - 7358130804) மற்றும் இணை இயக்குநரிடமோ (கைப்பேசி எண் - 7358122328) புகாரளிக்கலாம் என மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்குநரகம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்கு எண்ணிக்கை மைய வளாகத்துக்குள் அத்துமீறி நுழைய முயன்ற இளைஞரால் பரபரப்பு!

‘எங்கேயும் எப்போதும்..’

பாலியல் விடியோக்களை வெளியிட்டது நான்தான்.. பிரஜ்வல் ஓட்டுநர் பரபரப்பு வாக்குமூலம்!

மழை வேண்டி நூதன வழிபாடு: பன்றி பலியிட்டு விருந்து!

பதஞ்சலியின் 14 மருந்துகளுக்கு தடை!

SCROLL FOR NEXT