தமிழ்நாடு

ஆனைமலை மாசாணியம்மன் கோயில் குண்டம் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

ஆனைமலை மாசாணியம்மன் கோயில் குண்டம் திருவிழா கொடியேற்றத்துடன் இன்று தொடங்கப்பட்ட நிலையில், ராஜகோபுரம் அருகே 85 அடி உயரமுள்ள கொடிக்கம்பம் நடப்பட்டது.

DIN

ஆனைமலை மாசாணியம்மன் கோயில் குண்டம் திருவிழா கொடியேற்றத்துடன் இன்று தொடங்கப்பட்ட நிலையில், ராஜகோபுரம் அருகே 85 அடி உயரமுள்ள கொடிக்கம்பம் நடப்பட்டது.

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலையில் புகழ்பெற்ற மாசாணி அம்மன் கோயில் உள்ளது. கோயிலுக்கு நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். இங்கு ஆண்டுதோறும் தை அமாவாசையையொட்டி நடைபெறும் குண்டம் திருவிழா பிரசித்தி பெற்றது. இதில் கோவை மட்டுமின்றி வெளியூர் மக்களும் ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டு குண்டத்தில் இறங்குவார்கள்.

இந்த ஆண்டுக்கான திருவிழா இன்று முதல் தொடங்குவதை ஒட்டி இதற்காக நேற்று முன்தினம் சர்க்கார்பதி வனப்பகுதியில் இருந்து 85 அடி உயரம் உள்ள மூங்கில் கொடிக்கம்பம் கொண்டு வரப்பட்டது. இதனைத் தொடர்ந்து இன்று காலையில் ஆழியார் ஆற்றங்கரையில் கொடி கம்பத்துக்கு மஞ்சள், குங்குமம் பூசி புடவை உடுத்தி மலர்களால் அலங்கரிக்கப்பட்டு பூஜைகள் செய்யப்பட்டு மாசாணி அம்மன் கோயில் நற்பணிமன்ற பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கொடிக் கம்பத்தைத் தோளில் சுமந்தபடி முக்கிய வீதிகள் வழியாக கொடி மரம் வலம் வந்து ராஜகோபுரம் அருகே காலை 8 மணி அளவில் மாசாணி தாயே போற்றி என்ற பக்தர்கள் கோஷத்துடன் கொடிக்கம்பம் நடப்பட்டது. 

இந்த நிகழ்வில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர் இதனை அடுத்து வரும் பிப்ரவரி 3-ம் தேதி இரவு ஒரு மணியளவில் மயான பூஜையும் 6-ம் தேதி காலை குண்டம் இறங்கும் நிகழ்வும் வெகு விமர்சையாக நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தொடக்கக் கூட்டுறவு வங்கிப் பணியாளா்கள் ஆா்ப்பாட்டம்

கரூா், மணிப்பூா் சம்பவங்களை ஒன்றுபடுத்தக் கூடாது: கே.எஸ்.அழகிரி

திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல்

மார்க் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் விடியோ!

மக்களைத் தேடி மருத்துவ ஊழியா்களை பணி நிரந்தம் செய்ய வலியுறுத்தல்

SCROLL FOR NEXT