தமிழ்நாடு

ஏற்காட்டில் கடும் பனிப்பொழிவு: சுற்றுலாப் பயணிகள் பாதிப்பு

ஏற்காட்டில் நிலவும் கடும் பனிப்பொழிவு காணமாக சுற்றுலாப் பயணிகள்  சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

DIN

ஏற்காட்டில் நிலவும் கடும் பனிப்பொழிவு காணமாக சுற்றுலாப் பயணிகள்  சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் ஏற்காடு எப்போதும் மனதுக்கு இதமாகவும்,  குளிர்ச்சியான சூழ்நிலையும் நிலவுவதால் தமிழக மட்டுமல்ல பல்வேறு அண்டை மாநிலங்களை சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் ஏற்காட்டிற்கு வருவதுண்டு. 

ஏற்காட்டில் இயற்கையான அழகை கண்டு ரசிப்பதோடு, எப்போதும் மிதமான வெப்பநிலை நிலவுவதால் ஏற்காட்டின் அழகை ரசிக்க ஏராளமானோர் விடுமுறை நாள்களில் வந்து செல்வது வழக்கம்.

இந்த நிலையில் ஏற்காட்டில் காலை நேரத்தில் கடுமையான பனிப்பொழிவு காரணமாக பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக ஏற்காட்டின் அழகை ரசிக்க வரும் சுற்றுலாப் பயணிகள் கடுங்குளிரையும், கடுமையான பனிப்பொழிவையும் அனுபவிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. காலை 10 மணிக்கு மேலாகியும் ஏற்காட்டில் பனிப்பொழிவு காணப்படுவதால், இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரியவிட்ட படி தான் செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

எதிரில் வரும் ஆள்கள் கூட தெரியாத சூழ்நிலை ஏற்காட்டில் நிலவுவதால், ஒருபுறம் ஏற்காட்டின் அழகை ரசிக்கும் சுற்றுலாப் பணிகள் மறுபுறம் கடும் குளிரிலும், பனிப்பொழிவிலும் பாதிப்புள்ளாகியுள்ளனர்.

இன்று காலை ஏற்காட்டில் பரவலாக இதே போன்ற சூழ்நிலை தான் நிலவுகிறது. மாலை 4 மணிக்கு இந்த பனிமூட்டம் ஏற்படுவதாகவும், மாலையிலிருந்து இரவு விடிய விடிய மற்றும் நண்பகல் 12 மணி வரை இது போன்ற பணிபொழிவு இருப்பதால் சுற்றுலாப் பயணிகளும், சாலையோர வியாபாரிகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். 

நாளுக்கு நாள் இதுபோன்ற பணிபொழிவு அதிகரித்து வருகிறது என்றும், எப்போதும் இல்லாத அளவில் தற்போது குளிர் அதிகமாக உள்ளதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜம்மு - காஷ்மீரில் மேகவெடிப்பு: பலி எண்ணிக்கை 23 ஆக அதிகரிப்பு!

காலமானார் ஒலிம்பிக்ஸில் பதக்கம் வென்ற ஹாக்கி வீரர்!

அதிகாரத்தில் உள்ளவர்களின் ஆசியுடன் போதைப்பொருள் விநியோகம்: ஆளுநர் ரவி குற்றச்சாட்டு

ஆளுநரின் தேநீர் விருந்து: முதல்வர் ஸ்டாலின் புறக்கணிப்பு!

பாலஸ்தீனம் புதைக்கப்படுகிறது... மேற்கு கரையில் 3,400 வீடுகள் கட்ட அனுமதி: இஸ்ரேல் அமைச்சர்!

SCROLL FOR NEXT