தமிழ்நாடு

மாசி மகம்: மதுரையிலிருந்து நவ ஜோதிர்லிங்க தரிசன சுற்றுலா ரயில்

DIN

மாசி மகத்தை முன்னிட்டு நவ ஜோதிர்லிங்க தரிசன சுற்றுலா ரயில் இயக்கப்பட  உள்ளதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மதுரையிலிருந்து மார்ச் 3 ஆம் தேதி புறப்படும் ரயில் உஜ்ஜயினி, நர்மதை, ஸ்ரீசைலம் உள்ளிட்ட இடங்களுக்கு செல்கிறது.

மேலும் www.ularail.com என்ற இணையதளம் அல்லது 7305858585 என்ற எண் மூலம் பதிவு செய்துக் கொள்ளலாம் என்று ரயில்வே தெரிவித்துள்ளது.

அதன்படி மதுரையிலிருந்து மார்ச் 3 ஆம் தேதி புறப்பட்டு திண்டுக்கல், கரூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, பெரம்பூர் வழியாக மார்ச் 5 அன்று உஜ்ஜயினி சென்று மகா காளேஸ்வரர் வழிபாடு நடத்தப்படுகிறது.

பின்பு மார்ச் 6ஆம் தேதி நர்மதை நதியில் நீராடி ஓம்காரேஸ்வரர் தரிசனம், மார்ச் 7 அன்று சோம்நாத் சோமநாத சுவாமி தரிசனம், மார்ச் 9 அன்று நாசிக் திரையம்கேஸ்வரர் வழிபாடு, மார்ச் 10 அன்று பீம் சங்கர் பீம்சங்கர சுவாமி தரிசனம், மார்ச் 11 அன்று அவுரங்காபாத் குருஸ்ணேஸ்வரர் தரிசனம், மார்ச் 12 அன்று அவுங்நாக்நாத் அவுங்நாகநாதர் தரிசனம், மார்ச் 13 அன்று பார்லி வைத்தியநாதர் தரிசனம், மார்ச் 14 அன்று ஸ்ரீசைலம் மல்லிகார்ஜுன சுவாமி தரிசனம் முடித்து சுற்றுலா ரயில் மார்ச் 15 அன்று மதுரை வந்து சேருகிறது.

ரயில் கட்டணம், உணவு தங்குமிடம் உள்ளூர் பேருந்து கட்டணம் உள்பட நபர் ஒருவருக்கு ரூ.23,400 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல் நேரலை: தமிழக தொகுதிகளில் அதிகாரபூர்வ வெற்றி அறிவிப்பு!

அருணாசலில் இரு தொகுதிகளையும் கைப்பற்றியது பாஜக!

டி20 உலகக் கோப்பை தொடரை வெல்லும் நம்பிக்கை உள்ளது: பாட் கம்மின்ஸ்

எதிர்க்கட்சித் தலைவராகும் பவன் கல்யாண்?

மக்களவைத் தேர்தலில் பாஜக கனவு பலிக்கவில்லை: முதல்வர் ஸ்டாலின்

SCROLL FOR NEXT