கோப்புப்படம் 
தமிழ்நாடு

இடைத்தேர்தல்: தமாகா சார்பில் தேர்தல் பணிக்குழு அமைப்பு

ஈரோடு கிழக்கு தொகுதியில் அதிமுக வேட்பாளருக்கு வெற்றிவாய்ப்பை ஏற்படுத்த தமாகா சார்பில் தேர்தல் பணிக்குழுவை அமைத்து அக்கட்சியின் தலைவர் ஜிகே.வாசன் உத்தரவிட்டுள்ளார். 

DIN

ஈரோடு கிழக்கு தொகுதியில் அதிமுக வேட்பாளருக்கு வெற்றிவாய்ப்பை ஏற்படுத்த தமாகா சார்பில் தேர்தல் பணிக்குழுவை அமைத்து அக்கட்சியின் தலைவர் ஜிகே.வாசன் உத்தரவிட்டுள்ளார். 

இதன்படி ஈரோடு மத்திய மாவட்ட தமாகா தலைவர் விஜயகுமார் தலைமையில் 16 பேர் கொண்ட குழுவை அவர் அமைத்துள்ளார். அந்த குழுவில் விடியல் சேகர், யுவராஜா, ஆறுமுகம், சந்திரசேகர் உள்ளிட்ட நிர்வாகிகள் இடம்பெற்றுள்ளனர்.

ஈரோடு கிழக்கு தொகுதிக்கு பிப்ரவரி 27-இல் இடைத்தோ்தல் நடைபெற உள்ளது. இந்தத் தொகுதியில் கடந்த முறை அதிமுக கூட்டணி சாா்பில் தமாகா போட்டியிட்டு தோல்வி அடைந்தது. இடைத்தோ்தலிலும் தமாகா போட்டியிடுமா என்கிற கேள்வி இருந்து வந்தது.

இந்நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சா் டி.ஜெயக்குமாா் தலைமையிலான குழுவினா் ஜி.கே.வாசனை வியாழக்கிழமை (ஜன. 19) சந்தித்து, அங்கு அதிமுக போட்டியிட வேண்டிய நிலை குறித்து தெரிவித்தனா்.

இதையடுத்து ஈரோடு கிழக்கு தொகுதியை அதிமுகவுக்காக ஜிகே வாசன் விட்டுக்கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்தியா அனைவருக்குமானது, குறிப்பிட்ட சித்தாந்தத்திற்கு மட்டுமல்ல: முதல்வர் ஸ்டாலின்

மீண்டும் ரூ. 94,000 -யைக் கடந்த தங்கம் விலை!

உலகக் கோப்பை ஹாக்கி: அனுமதி இலவசம் - டிக்கெட்டுகளை பெறுவது எப்படி?

இலங்கை அருகே உருவாகும் மற்றொரு புயல்! வடதமிழக கடற்கரையை நோக்கி நகரும்!

தேசிய பால் நாள்: விவசாயிகளிடம் குறைகளைக் கேட்டறிந்த அமைச்சர்!

SCROLL FOR NEXT