முகப்பு
தமிழ்நாடு

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து சரிவு!

மேட்டூர் அணைக்கான நீர்வரத்து 815கன அடியாக சரிந்துள்ளது.

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 12:53 PM
மேட்டூர் அணை (கோப்புப்படம்)
பகிர்:

மேட்டூர் அணைக்கான நீர்வரத்து 815கன அடியாக சரிந்துள்ளது.

காவிரியின் நீர் பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாத காரணத்தாலும் கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கப்படாததாலும் மேட்டூர் அணை நீர்வரத்து சரிந்து வருகிறது. இன்று காலை அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 8 19கன அடியிலிருந்து வினாடிக்கு 815கன அடியாக சரிந்துள்ளது.  

அணையில் இருந்து காவிரி டெல்டா  பாசனத்திற்கு  வினாடிக்கு 8,000 கன வீதம் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. அணையிலிருந்து திறக்கப்படும் நீரின் அளவைவிட அணைக்கு வரும் நீரின் அளவு குறைவாக இருப்பதால் நேற்று காலை 105.54அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 105.07 அடியாக சரிந்தது. அணையின் நீர் இருப்பு 71.56 டி.எம்.சியாக உள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →