தமிழ்நாடு

சிதம்பரம் நகராட்சியில் தூய்மைப் பணியாளர்கள் தேசியக் கொடி ஏற்றினார்! 

சிதம்பரம் நகராட்சியில் வியாழக்கிழமை நடைபெற்ற 74 ஆவது குடியரசு நாள் விழாவில் துய்மைப்பாளர்கள் பணியாளர் பாப்பாள் அமாவாசை தேசியக் கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினர்.

DIN

சிதம்பரம்: சிதம்பரம் நகராட்சியில் வியாழக்கிழமை நடைபெற்ற 74 ஆவது குடியரசு நாள் விழாவில் துய்மைப் பணியாளர் பாப்பாள் அமாவாசை தேசியக் கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினர்.

அதனைத் தொடர்ந்து நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில் நகரமன்ற தலைவர் கே. ஆர். செந்தில்குமார் தலைமை வகித்து தேசியக்கொடி ஏற்றிய துப்புரவு பணியாளர் பாப்பம்மாள் அமாவாசை அமாவாசைக்கு பொன்னாடை அணிவித்து கௌரவித்தார். 

இந்நிகழ்ச்சியில் நகராட்சி ஆணையர் அஜிதா பர்வீன், பொறியாளர் மகாராஜன், நகர மன்ற உறுப்பினர்கள் த.ஜேம்ஸ் விஜயராகவன், அப்பு சந்திரசேகரன், ஆ.ரமேஷ், தில்லை ஆர். மக்கின், நகர மன்ற துணைத் தலைவர் முத்துக்குமார் உள்பட நகரமன்ற உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.

பின்னர் விழாவில் தூய்மைப் பணியாளர்களுக்கு முகக்கவசம் மற்றும் இனிப்புகளை நகரமன்ற தலைவர் வழங்கினார். 

அதனைத் தொடர்ந்து பேருந்து நிலையம் அருகே உள்ள மகாத்மா காந்தி சிலைக்கு நகரமன்ற தலைவர் கே.ஆர்.செந்தில்குமார்மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். 

நிகழ்ச்சியில் நகர திமுக துணைச் செயலாளர் பா.பாலசுப்ரமணியன், மாவட்ட பிரதிநிதிகள் வி.என்.ஆர்  கிருஷ்ணமூர்த்தி, ரா.வெங்கடேசன், வர்த்தக அணி துணை அமைப்பாளர் ஏ ஆர் சி. மணிகண்டன், மாரியப்பன், தொழில்நுட்ப பிரிவு ஸ்ரீதர், நகர இளைஞரணி அமைப்பாளர் மக்கள் அருள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரூ.2000 கோடி! 850 ஆளில்லா விமானங்களை வாங்க இந்திய ராணுவம் திட்டம்!

ஸ்ரீராம் ஃபைனான்ஸ் பங்குகள் 4% உயர்வு!

இவ்வளவு நபர்கள் முகவரி இல்லாமல் இருந்திருக்கிறார்களா? ப.சிதம்பரம்

97 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்! விளக்கிய தமிழக தலைமை தேர்தல் அதிகாரி Archana Patnaik!

தேநீர் விருந்தளித்த மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா

SCROLL FOR NEXT