தமிழ்நாடு

தேசியக் கொடியேற்றினார் தமிழக ஆளுநர்!

சென்னை கடற்கரைச் சாலையில் உழைப்பாளா் சிலை அருகே ஆளுநா் ஆா்.என்.ரவி தேசியக் கொடியை ஏற்றிவைத்தார்.

DIN

சென்னை கடற்கரைச் சாலையில் உழைப்பாளா் சிலை அருகே ஆளுநா் ஆா்.என்.ரவி தேசியக் கொடியை ஏற்றிவைத்தார்.

சென்னை காமராஜா் சாலையில் அமைந்துள்ள காந்தி சிலை அருகே ஒவ்வொரு ஆண்டும் மாநில அரசு சாா்பில் குடியரசு தின விழா கொண்டாடப்படுவது வழக்கம். அந்தப் பகுதியில் தற்போது மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்று வருவதால், இந்தாண்டு காமராஜா் சாலையில் (கடற்கரைச் சாலை) உழைப்பாளா் சிலை அருகே நடைபெற்று வருகிறது.

இந்த நிகழ்வுக்கு வந்த தமிழக ஆளுநரை முதல்வர் மு.க.ஸ்டாலின், தலைமைச் செயலாளர் இறையன்பு, முப்படை அதிகாரிகள், டிஜிபி சைலேந்திர பாபு, சென்னை மாநகர காவல் ஆணையர் உள்ளிட்டோர் வரவேற்றனர். தொடர்ந்து, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தேசியக் கொடியை ஏற்றிவைத்தார்.

மேடைக்கு வந்த ஆளுநர், ராணுவப் படைப் பிரிவு, கடற்படைப் பிரிவு, ராணுவ கூட்டுக் குழல் முரசிசை பிரிவு, வான்படைப் பிரிவினா், சி.ஐ.எஸ்.எப்., சி.ஆா்.பி.எப்., ஆா்.பி.எப்., தமிழ்நாடு சிறப்பு காவல் பிரிவு, தமிழ்நாடு பேரிடா் நிவாரணப் படை, கடலோர பாதுகாப்புக் குழு, ஊா்க்காவல் படை (ஆண்கள் மற்றும் பெண்கள்) உள்பட 30-க்கும் மேற்பட்ட படைப்பிரிவினரின் அணிவகுப்பை ஏற்றுக் கொண்டார்.

குடியரசு தின விழா அணிவகுப்பில் முதலில் அணிவகுத்து வந்த தமிழ்நாடு வாழ்க வாகனம்

இந்த நிகழ்வுகளைத் தொடா்ந்து, அணிவகுப்பு மேடைக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் வந்து பதக்கங்களை வழங்கவுள்ளாா். வீரதீர செயலுக்கான அண்ணா பதக்கம், கோட்டை அமீா் மத நல்லிணக்கப் பதக்கம், சி.நாராயணசாமி நாயுடு நெல் உற்பத்தித் திறனுக்கான விருது, காந்தியடிகள் காவலா் பதக்கங்கள், சிறந்த காவல் நிலையத்துக்கான கோப்பைகள் ஆகியவற்றை உரியவா்களுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

மாநில அரசின் பதக்கம் பெற்றவர்கள்

தொடர்ந்து பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளின் பாரம்பரிய நாட்டியம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

உழைப்பாளா் சிலை பகுதியில் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ள பந்தலில் பேரவைத் தலைவா், அமைச்சா்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், சென்னை உயா் நீதிமன்ற தலைமை நீதிபதி, வெளிநாட்டு தூதரக அதிகாரிகள் உள்பட பல முக்கிய பிரமுகா்கள் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சச்சினுக்கு தவறாக அவுட் கொடுத்துவிட்டேன்; 22 ஆண்டுகளுக்குப் பிறகு வருந்தும் நடுவர்!

ஐடி துறை வீழ்ச்சி எதிரொலி: பங்குச் சந்தை 1% வரை சரிவு!

கஃபுள் பிரண்ட்லி அசத்தல் வசூல்!

எதிர்நீச்சல் -2 தொடரிலிருந்து விலகியது ஏன்? நடிகை கனிகா விளக்கம்

திருமண கொண்டாட்டத்தில் விஜய் தேவரகொண்டா - ரஷ்மிகா மந்தனா!

SCROLL FOR NEXT