தமிழ்நாடு

திருப்பூரில் 74-ஆவது குடியரசு நாள் விழா கொண்டாட்டம்: தேசியக் கொடியேற்றினார் ஆட்சியர்!

DIN

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் சார்பில் நாட்டின் 74-ஆவது குடியரசு நாள்விழா கல்லூரி சாலையில் உள்ள சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இந்த குடியரசு நாள் விழாவில் மாவட்ட ஆட்சியர் சு. வினீத் தேசிய கொடியை ஏற்றிவைத்து காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.

தொடர்ந்து, வானில் வண்ண பலூன்கள் பறக்க விடப்பட்டது,  மாவட்ட, மாநகர பகுதிகளை சேர்ந்த  வீரதீர செயல்புரிந்த  56 காவலர்களுக்கு முதல்வர் பதக்கத்தையும், சிறப்பாக பணிபுரிந்த 101 காவலர்களை பாராட்டி சான்றிதழ்களும் வழங்கினார்.

அதனைத் தொடர்ந்து, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, வருவாய்த்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சார்ந்த 113 பயனாளிளுக்கு  ரூ 1.91 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

முன்னதாக சுதந்திரப் போராட்ட வீரர்களின் வாரிசுகளுக்கு பொன்னாடை அணிவித்து கௌரவித்தார். 

இந்த விழாவில் திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சசன் சாய்,மாநகர காவல் ஆணையர் பிரவீன் குமார் அபிந பு,மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய் பீம்,சார் ஆட்சியர் ஸ்ருதன் ஜெய் நாராயணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காந்தாரி.. ஈஷா ரெப்பா!

ஸ்ரீரங்கம் தேரோட்டம் கோலாகலம்!

நேரத்தை மிச்சப்படுத்தும் ஏஐ : 94% பணியாளர்களின் கருத்து என்ன?

சென்னை-நாகர்கோவில் சிறப்பு ரயில் 19 மணி நேரம் தாமதமாகப் புறப்படும்!

ஆயிரம்விளக்கு அருகே பூங்காவில் சிறுமியை கடித்த வளர்ப்பு நாய்கள்

SCROLL FOR NEXT