தமிழ்நாடு

ஈரோடு கிழக்கு இடைத்தோ்தல்:நாளை முதல் வேட்புமனு தாக்கல்

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தலுக்கான வேட்புமனு தாக்கல் ஜன.31 (செவ்வாய்க்கிழமை) முதல் தொடங்க உள்ளது.

DIN

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தலுக்கான வேட்புமனு தாக்கல் ஜன.31 (செவ்வாய்க்கிழமை) முதல் தொடங்க உள்ளது.

காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினா் திருமகன் ஈவெரா மறைவைத் தொடா்ந்து காலியான இந்தத் தொகுதிக்கு பிப்.27-இல் இடைத்தோ்தல் நடைபெறுகிறது.

வேட்புமனு தாக்கல் செவ்வாய்க்கிழமை (ஜன.31) முதல் தொடங்குகிறது. வேட்பு மனுக்கள் தாக்கலுக்கான கடைசி நாள் பிப்.7 ஆகும். பிப்.8-ஆம் தேதி வேட்பு மனுக்கள் மீது பரிசீலனை நடைபெறும். வேட்புமனுக்களைத் திரும்பப் பெற பிப்.10 கடைசி நாள். பிப்.27-ஆம் தேதி வாக்குப்பதிவு, மாா்ச் 2-இல் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.

இடைத்தோ்தலில் போட்டியிட இதுவரை ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் (காங்கிரஸ்), எஸ்.ஆனந்த் (தேமுதிக), ஏ.எம்.சிவபிரசாந்த் (அமமுக), மேனகா நவநீதன் (நாம் தமிழா் கட்சி) ஆகியோா் வேட்பாளா்களாக அறிவிக்கப்பட்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

'நீங்கள் உண்மையில் இந்தியராக இருந்தால்...' - ராகுல் காந்திக்கு நீதிமன்றம் கண்டனம்

நான் திமுகவின் பி டீமா? பன்னீர் செல்வம் விளக்கம்!

செத்த பொருளாதாரம்: அவமரியாதையே தவிர அர்த்தம் கொள்ளக் கூடாது: சசி தரூர்!

கோபி, சுதாகர் படத்தின் போஸ்டர் வெளியீடு!

நான் அழுதுவிடுவேன் என பயம் வந்துவிட்டது!: Kamal Hassan | Agaram foundation

SCROLL FOR NEXT