முகப்பு
தமிழ்நாடு

பெரம்பூர் ஸ்டீபென்சன் சாலை உயர்மட்ட மேம்பாலத்தை திறந்துவைத்தார் முதல்வர் 

பெரம்பூர் ஸ்டீபென்சன் சாலை உயர்மட்ட மேம்பாலத்தை முதல்வர் ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 7:15 PM
பகிர்:

பெரம்பூர் ஸ்டீபென்சன் சாலை உயர்மட்ட மேம்பாலத்தை முதல்வர் ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். 

கொளத்தூர் தொகுதியில் முடிவுற்ற பல்வேறு திட்டங்களை முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று நேரில் தொடக்கி வைத்தார். பூங்கா, வகுப்பறைகளைத் தொடர்ந்து பெரம்பூர் ஸ்டீபென்சன் சாலை உயர்மட்ட மேம்பாலத்தையும் அவர் திறந்து வைத்தார்.

இந்நிகழ்வின் போது அமைச்சர்கள் கே.என்.நேரு, சேகர்பாபு, சென்னை மேயர் ப்ரியா உள்ளிட்டோர் உடனிருந்தனர். 

ஸ்டீபன்சன் சாலையில் ஓட்டேரி நல்லா கால்வாய்க்கு மேல் செல்லும் வகையில், 824 மீட்டர் நீளத்தில், 66 கோடி செலவில் இந்த மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது. பணிகள் தொடங்கி 18 மாதத்திற்குள் முடிக்கப்பட்டு, பொதுமக்கள் பயன்பாட்டிற்கு மேம்பாலம் திறக்கப்பட்டது.

இந்த பாலம் பயன்பாட்டிற்கு வந்ததையடுத்து கொளத்துார், பெரம்பூர், திரு.வி.க., நகர் தொகுதி மக்கள் மட்டுமின்றி அவற்றின் சுற்று வட்டாரங்களில் இருந்து, பி.பி., சாலை, கணேசபுரம், புளியந்தோப்பு வழியாக டவுட்டன், வேப்பேரி, சென்ட்ரல், பாரிமுனை செல்வோர் போக்குவரத்து நெரிசலின்றி குறித்த நேரத்தில் பயணிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

முழு கட்டுரையைப் படிக்க →