மனைவி கீர்த்திகா, குழந்தைகளுடன் கலைவாணன் 
தமிழ்நாடு

மனைவி கழுத்து அறுத்து கொலை: கணவர் கைது

மயிலாடுதுறை அருகே மனைவியின் கழுத்தை அறுத்து கொலை செய்த கணவனை போலீசார் கைது செய்தனர்.

DIN

மயிலாடுதுறை: மயிலாடுதுறை அருகே மனைவியின் கழுத்தை அறுத்து கொலை செய்த கணவனை போலீசார் கைது செய்தனர்.

மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு காவல் சரகம் புத்தகரம் மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் கலைவாணன்(38). இவருக்கும் கீர்த்திகா (29) என்பவருக்கும் திருமணம் ஆகி இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். 

வெளிநாட்டில் வேலை வார்த்து வந்த கலைவாணன் கடந்த மாதம் விடுமுறையில் ஊர் திரும்பினார். வீட்டிற்கு வந்த கலைவாணன்  தன் மனைவியிடம் தான் சம்பாதித்து அனுப்பிய பணத்திற்கு கணக்கு கேட்டுள்ளார். அப்போது கிருத்திகா கணவன் அனுப்பிய பணத்தை தனது தந்தை வீட்டிற்கும், கணவரின் உறவினர்களுக்கும்  கொடுத்ததுடன் ஊதாரித்தனமாக செலவு செய்தது தெரியவந்தது. 

இதனால் கடந்த சில நாட்களாக கணவன் மனைவி இடையே தகராறு நடைபெற்று வந்த நிலையில் சனிக்கிழமை அதிகாலை கலைவாணன் தனது மனைவி கீர்த்திகாவின் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார். 

இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மணல்மேடு போலீசார் கிருத்திகாவின் உடலை கைப்பற்றி உடல் கூறாய்வுக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததுடன் கலைவாணனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சோழீஸ்வரா் கோயில் குடமுழுக்கு: திரளானோா் தரிசனம்

தனுசுக்கு மன மகிழ்ச்சி: தினப்பலன்கள்!

வீட்டின் தடுப்புச் சுவா் சரிந்து விழுந்ததில் தொழிலாளி உயிரிழப்பு

தேசிய குருதிக் கொடையாளா் தின விழா

வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி: இன்று முதல் கணக்கெடுப்புப் படிவம் விநியோகம்

SCROLL FOR NEXT