தமிழ்நாடு

தீட்சிதர் விவகாரம்: பாஜக மாநிலச் செயலர் எஸ்.ஜி.சூர்யாவிற்கு சம்மன் 

சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சிதர் விவகாரத்தில் பாஜக மாநிலச் செயலர் எஸ் ஜி சூர்யா விசாரணைக்கு ஆஜராகும்படி காவல்துறையினர் சம்மன் அனுப்பியுள்ளனர்.  

DIN

சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சிதர் விவகாரத்தில் பாஜக மாநிலச் செயலர் எஸ் ஜி சூர்யா விசாரணைக்கு ஆஜராகும்படி காவல்துறையினர் சம்மன் அனுப்பியுள்ளனர். 

சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சிதரை இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் காவலர்கள் அவமதித்ததாக ட்விட்டர் பக்கம் ஒன்றல் கருத்து பதிவிடப்பட்டிருந்தது. இதுதொடர்பாக சிதம்பரம் நகர கிராம நிர்வாக அலுவலர் ஷேக் சிராஜூதின் சிதம்பரம் நகர காவல் நிலையத்தில் கடந்த ஜூன் 28-ம் தேதி புகார் அளித்தார்.

இதைத்தொடர்ந்து புகாரின் பேரில் வழக்குபதிவு செய்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். 

இதனிடையே இந்த வழக்கு தொடர்பாக விசாரிப்பதற்காக ஜூலை 4-ம் தேதி சிதம்பரம் நகர காவல் நிலையத்தில் பாஜக மாநில செயலாளரான எஸ் ஜி சூர்யா ஆஜராக வேண்டும் என சம்மன் அனுப்பியியுள்ளனர்.

சென்னையில் உள்ள அவரது இல்லத்திற்கு இந்த நோட்டீஸ் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஏற்கெனவே ட்விட்டர் பக்கத்தில் அவதூறு கருத்து வெளியிட்டதாக மதுரையில் நாடாளுமன்ற உறுப்பினர் சு வெங்கடேசன் அளித்த புகாரின் அடிப்படையில் பாஜக மாநில செயலாளர் எஸ் ஜி சூர்யா கைது செய்யப்பட்டார்.

இதையடுத்து அவர் நிபந்தனை ஜாமினில் வெளியே வந்தார். இந்த நிலையில் சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சிதர் விவகாரத்தில் விசாரணைக்கு ஆஜராகும்படி எஸ் ஜி சூர்யாவிற்கு காவல்துறையினர் சம்மன் அனுப்பியிருப்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆறுமுகனேரியில் தெருமுனைப் பிரசாரம்

பாதுகாப்பும் பயணமும்...

திருப்பதி லட்டு விவகாரம்: சுப்பிரமணியன் சுவாமி மனுவை விசாரணைக்கு ஏற்க மறுத்த உச்சநீதிமன்றம்

மாற்றத்தை ஏற்படுத்திய தமிழர் பண்பாடு

அனவன்குடியிருப்பில் யானைகள் அட்டகாசம்: நெல், மா, கரும்பு உள்ளிட்டவை சேதம்

SCROLL FOR NEXT