தமிழ்நாடு

ஜூன் மாதத்தில் சென்னை மெட்ரோ ரயில் சாதனை! 74.06 லட்சம் பேர் பயணம்!!

சென்னை மெட்ரோ ரயிலில் இதுவரை இல்லாத வகையில் நடப்பாண்டு ஜூன் மாதத்தில் 74.06 லட்சம் பேர் பயணித்துள்ளதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. 

DIN

சென்னை மெட்ரோ ரயிலில் இதுவரை இல்லாத வகையில் நடப்பாண்டு ஜூன் மாதத்தில் 74.06 லட்சம் பேர் பயணித்துள்ளதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. 

இதுகுறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், 'சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், சென்னையில் உள்ள மக்களுக்கும், வெளி ஊரில் இருந்து வரும் பயணிகளுக்கும் நம்பகத் தன்மையான மற்றும் பாதுகாப்பான போக்குவரத்து வசதியை அளித்து வருகிறது.

அந்தவகையில் கடந்த மே மாதத்தைவிட ஜூன் மாதத்தில் 1,38,869 பயணிகள் கூடுதலாக பயணித்துள்ளனர். 

மெட்ரோ ரயில் சேவை தொடங்கியதில் இருந்து நடப்பாண்டு ஜூன் மாத பயணிகளின் எண்ணிக்கையே அதிகமாகும். 

ஜனவரியில் 66,07,458, பிப்ரவரியில் 63,69,282, மார்ச் மாதத்தில் 69,99,341, ஏப்ரல் மாதத்தில் 66,85,432, மே மாதத்தில் 72,68,007 பயணிகளும் ஜூன் மாதத்தில் அதிகபட்சமாக 74,06,876 பயணிகளும் பயணம் செய்துள்ளனர். 

ஜூன் மாதத்தில் ஜூன் 28 அன்று அதிகபட்சமாக 2,95,509 பேர் பயணித்துள்ளனர்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சென்னை பிஎஸ்என்எல் அலுவலகத்தில் தீ விபத்து!

தொடர் நாயகன் வருண் சக்கரவர்த்தி பகிர்ந்த படையப்பா பாடல்!

நெல்லையில் முதல்வர் ஸ்டாலின் சுற்றுப்பயணம்! ட்ரோன்கள் பறக்க தடை! மாநகரம் விழாக்கோலம்!!

பிரபல மலையாள நடிகர் ஸ்ரீனிவாசன் காலமானார்!

அசாமில் ரயில் மோதியதில் 8 யானைகள் பலி! பெட்டிகள் தடம்புரண்டன!

SCROLL FOR NEXT