முதல்வர் ஸ்டாலின் மருத்துவமனையில் அனுமதி!
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திங்கள்கிழமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் வழக்கமான மாதந்திர மருத்துவ பரிசோதனைக்காக முதல்வர் ஸ்டாலின் இன்று மாலை 5.30 மணியளவில் அனுமதிக்கப்பட்டார்.
மேலும், பரிசோதனைகள் முடிந்து நாளை(செவ்வாய்க்கிழமை) வீடு திரும்புவார் என்று மருத்துவமனை தரப்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
இதையும் படிக்க | மேக்கேதாட்டுவில் அணை கட்டும் முயற்சி முறியடிக்கப்படும்: இபிஎஸ்-க்கு துரைமுருகன் பதில்!
இதனைத் தொடர்ந்து, மருத்துவமனை சுற்றி பலத்த பாதுகாப்பு போடப்பட்டு காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.