சந்தீப் ராய் ரத்தோர் (கோப்புப் படம்) 
தமிழ்நாடு

பணியின்போது காவலர்கள் செல்போன் பயன்படுத்தக் கூடாது: சென்னை ஆணையர்

பணியில் இருக்கும்போது காவலர்கள் செல்போன் பயன்படுத்தக் கூடாது என்று சென்னை மாநகர காவல்துறை ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவிட்டுள்ளார்.

DIN

சென்னை: பணியில் இருக்கும்போது காவலர்கள் செல்போன் பயன்படுத்தக் கூடாது என்று சென்னை மாநகர காவல்துறை ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவிட்டுள்ளார்.

சென்னை காவல் ஆணையராக இருந்த சங்கர் ஜிவால், காவல்துறை தலைவராக பதவி உயர்வு பெற்ற நிலையில், சென்னை ஆணையராக சந்தீப் ராய் ரத்தோர் பதவியேற்றுக் கொண்டார்.

இந்நிலையில், காவலர்களுக்கு முக்கிய உத்தரவு ஒன்றை இன்று வெளியிட்டுள்ளார்.

அதில், “சட்டம் மற்றும் ஒழுங்கு, முக்கியப் பிரமுகர்கள் பாதுகாப்புப் பணி, கோவில் மற்றும் திருவிழா பாதுகாப்பு பணி, போக்குவரத்து ஒழுங்குபடுத்துதல் போன்ற பணிகளில் இருக்கும் காவலர்கள் விழிப்புடன் பணி செய்வது மிக முக்கியம் வாய்ந்தது. இச்சமயங்களில் செல்போன்களை பயன்படுத்துவது காவல் ஆளிநர்களின் கவனத்தை திசை திருப்புகிறது.

எனவே, காவல் உதவி ஆய்வாளர்களுக்கு கீழ் உள்ள ஆளிநர்கள் பணியின்போது செல்போன் பயன்படுத்தக் கூடாது என அறிவுறுத்தப்படுகிறது.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆடிப் பெருக்கு: தாமிரவருணி கரையோரங்களில் சிறப்பு வழிபாடு

ஆடிப் பெருக்கு: தாமிரவருணி கரையோரங்களில் சிறப்பு வழிபாடு

கல்லிடைக்குறிச்சியில் எஸ்டிபிஐ பூத் கமிட்டி கலந்தாய்வுக் கூட்டம்

திசையன்விளையில் நலம் காக்கும் ஸ்டாலின் சிறப்பு மருத்துவ முகாம்

கால்வாயில் காா் கவிழ்ந்து 11 போ் உயிரிழப்பு; நால்வா் காயம்

SCROLL FOR NEXT