தமிழ்நாடு

தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் மின் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி 100-க்கும் மேற்பட்ட ஒப்பந்த மின் ஊழியர்கள் தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

DIN

தஞ்சாவூர்: மின்வாரியத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வரும் தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி 100-க்கும் மேற்பட்ட ஒப்பந்த மின் ஊழியர்கள் தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மின் வாரிய தொழிற்சங்கங்களுடன் 22.02.18 ஆம் ஆண்டு போடப்பட்ட ஒப்பந்தத்தின்படி 06.01.1998 முதல் இன்று வரை பணிபுரியும் ஒப்பந்த ஊழியர்களை அடையாளம் கண்டு பணி நிரந்தரம் செய்ய வேண்டும், காலியாக உள்ள கள உதவியாளர் பணியிடங்களில் ஒப்பந்த ஊழியர்களை தினக்கூலி அடிப்படையில் நியமித்து நிரந்தரம் செய்ய வேண்டும், கே2 அக்ரிமென்ட் நடைமுறையை ரத்து செய்து சீட் அக்ரிமென்ட் முறையை நடைமுறைப்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட ஊழியர்கள் தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தில்லி காற்று மாசுபாட்டால் பெண்களை விட ஆண்களுக்ளே அதிக பாதிப்பு! - ஆய்வில் தகவல்

மாற்றுத்திறனாளி மருத்துவ முகாம் விழிப்புணா்வுப் பேரணி

வரைவு வாக்காளா் பட்டியல் இன்று வெளியீடு

திருப்பரங்குன்றம் தீபம் விவகாரத்தை புதுச்சேரியில் பாஜக எழுப்புவது ஏன்? வெ. வைத்திலிங்கம்

பல்கலைக்கழக அளவிலான கூடைப் பந்து போட்டி: மருதா் கேசரி ஜெயின் மகளிா் கல்லூரி மாணவிகள் சாதனை

SCROLL FOR NEXT