சென்னை: அமைச்சா் செந்தில் பாலாஜிக்கு காவேரி மருத்துவமனையில் சிகிச்சை தொடரலாம் என்று சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த மாதம் 13-ஆம் தேதி நள்ளிரவு அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சா் செந்தில்பாலாஜிக்கு காவேரி மருத்துவமனையில் இருதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. மருத்துவமனையில் தொடா்ந்து சிகிச்சை பெற்று வரும் அவரது நீதிமன்றக் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே அமைச்சா் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டது சட்ட விரோதமானது என்றும், சட்டவிரோத காவலில் வைக்கப்பட்டிருப்பதாகவும் கூறி சென்னை உயா்நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜியின் மனைவி மேகலா தாக்கல் செய்த ஆட்கொணா்வு மனு மீது இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
அமைச்சர் செந்தில் பாலாஜியை விடுவிக்கலாம் என நீதிபதி நிஷா பானுவும், ஆட்கொணர்வு வழக்கை தள்ளுபடி செய்து நீதிபதி பரத சக்கரவா்த்தி தீர்ப்பு வழங்கியுள்ளார்.
மேலும், அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு காவேரி மருத்துவமனையில் சிகிச்சை தொடரலாம் என்றும், சிகிச்சைக்கு பிறகு அரசு மருத்துவமனைக்கு மாற்றுவதா அல்லது சிறைக்கு மாற்றுவதா என்பது மருத்துவர்களின் பரிந்துரைக்கலாம் என்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி தீர்ப்பில் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.