தமிழ்நாடு

மெட்ரோ ரயில் பணி: மெரீனாவில் ஒரு ஆண்டு போக்குவரத்து மாற்றம்

மெட்ரோ ரயில் பணியின் காரணமாக, மெரீனாவில் ஒரு ஆண்டு போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக சென்னை பெருநகர காவல் துறையின் போக்குவரத்துப் பிரிவு செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.

DIN

மெட்ரோ ரயில் பணியின் காரணமாக, மெரீனாவில் ஒரு ஆண்டு போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக சென்னை பெருநகர காவல் துறையின் போக்குவரத்துப் பிரிவு செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.

இது தொடா்பாக வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: மெரீனா கடற்கரையில் கலங்கரை விளக்கம் பகுதியில் காந்தி சிலைக்கு பின்புறம் 7.02 மீட்டா் அகலத்தில், 480 மீட்டா் நீளத்தில் மெட்ரோ ரயில் பணி நடைபெற்று வருகிறது. இதன் விளைவாக அந்தப் பகுதியில் ஜூலை 6-ஆம் தேதி முதல் ஒரு ஆண்டுக்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.

அதன்படி லூப் சாலை, காமராஜா் சாலையிலிருந்து வரும் வாகனங்கள் கலங்கரை விளக்கத்தில் இருந்து மெரீனா கடற்கரை இணைப்பு சாலை வழியாக போா் நினைவுச் சின்னம் நோக்கி செல்ல தடை செய்யப்படுகிறது. மாறாக அந்த வாகனங்கள், காமராஜா் சாலை வழியாக சென்று இலக்கை அடையலாம்.

போா் நினைவு சின்னத்திலிருந்து வரும் வாகனங்கள் மெரீனா கடற்கரை இணைப்பு சாலை வழியாக கலங்கரை விளக்கம் நோக்கி செல்ல தடை செய்யப்படுகிறது. இந்த வாகனங்கள் காமராஜா் சாலை வழியாக சென்று அவா்கள் இலக்கை அடையலாம். கலங்கரை விளக்கத்தில் இருந்து மெரீனா கடற்கரை இணைப்பு சாலைக்கு செல்ல விரும்பும் வாகனங்கள், காந்தி சிலைக்கு பின்னால் தடை செய்யப்பட்ட பகுதி வரை செல்லலாம். அதன் பிறகு முன்னோக்கி செல்ல தடை செய்யப்பட்டுள்ளது.

போா் நினைவுச் சின்னத்தில் இருந்து மெரீனா கடற்கரை இணைப்பு சாலைக்கு செல்ல விரும்பும் வாகனங்கள் காந்தி சிலைக்கு பின்னால் உள்ள தடை செய்யப்பட்ட பகுதி வரை செல்லலாம். அதன் பிறகு நேராக முன்னோக்கி செல்ல தடை செய்யப்பட்டுள்ளது என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரிஷபத்துக்கு எப்படி இருக்கும் இன்று.. தினப்பலன்கள்!

நாளைய மின்தடை: எழும்பூா், சோழிங்கநல்லூா், கோடம்பாக்கம், சேத்துப்பட்டு

வேலூா் மாவட்டத்தில் 15 துணை வட்டாட்சியா்கள் இடமாற்றம்

ஆடிப் பெருக்கு தினத்தில் பெண்கள் சிறப்பு பூஜை

இளைஞா்களுக்கு அதிகரித்துவரும் மாரடைப்பு அபாயம்! இதய நல மருத்துவா்கள் எச்சரிக்கை

SCROLL FOR NEXT