மகளிர் உரிமைத் தொகை: முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை
மகளிர் உரிமைத் தொகை திட்டம் தொடர்பாக மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோனையில் ஈடுபட்டார்.
மகளிர் உரிமைத் தொகை திட்டம் தொடர்பாக மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோனையில் ஈடுபட்டார்.
சென்னை தலைமைச் செயலத்தில் இருந்து காணொளி மூலம் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் இந்த ஆலோசனை நடைபெற்றது. அப்போது, மகளிர் உரிமைத் தொகை தொடர்பாக நியாயவிலைக் கடை அளவில் சிறப்பு முகாம்கள் அமைக்க வேண்டும். ஒரு பயணாளி கூட விடுபடாமல் இந்த திட்டத்தை சிறப்பாக செயல்படுத்த வேண்டும்.
குடும்ப அட்டை, வயது வரம்பு, ஆண்டு வருமானம் உள்ளிட்டவற்றை அடிப்படையாகக் கொண்டு குடும்பத் தலைவிகள் தேர்வு செய்யப்பட உள்ளனர். தகுதி வாய்ந்த பெண்களுக்கு உரிமைத் தொகை அவர்களுடைய வங்கிக் கணக்கில் செலுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பன உள்ளிட்ட அறிவுறுத்தல்களை அதிகாரிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.
மகளிர் உரிமைத் தொகையாக மாதம்தோறும் ரூ.1,000 வழங்கும் திட்டம் செப்டம்பர் மாதம் தொடங்கவுள்ள நிலையில் அவர் ஆலோசனை மேற்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.