தஞ்சாவூரில் வெள்ளிக்கிழமை காலை நடைபெற்ற திருமண விழாவில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின். 
தமிழ்நாடு

தஞ்சாவூர் எனக்கு நெருக்கமான மாவட்டம்! உதயநிதி ஸ்டாலின்!!

நான் அமைச்சராக பொறுப்பேற்று 6 மாத காலமாகின்றன. இந்த 6 மாதங்களில் தஞ்சாவூர் மாவட்டத்துக்கு 4  முறை வந்துள்ளேன்.

DIN


தஞ்சாவூர்: தஞ்சாவூர் எனக்கு நெருக்கமான மாவட்டம் என இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தஞ்சாவூரில் வெள்ளிக்கிழமை காலை நடைபெற்ற திருமண விழாவில் பங்கேற்ற அவர் பேசியது:

தஞ்சாவூர் எனக்கு மிகவும் நெருக்கமான மாவட்டம். எனக்கு எவ்வளவு நெருக்கமான மாவட்டம் என்பது அனைவருக்கும் தெரியும். நான் அமைச்சராக பொறுப்பேற்று 6 மாத காலமாகின்றன. இந்த 6 மாதங்களில் தஞ்சாவூர் மாவட்டத்துக்கு 4  முறை வந்துள்ளேன்.

கடந்த 10 நாட்களுக்கு முன்பு கூட தஞ்சாவூருக்கு வந்தேன்.‌ மணமக்கள் நீடுழி வாழ வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார் உதயநிதி ஸ்டாலின்.

இவ்விழாவில் பத்திரப் பதிவுத்துறை அமைச்சர் பி. மூர்த்தி, தமிழக அரசின் தலைமை கொறடா கோவி.செழியன், மாநிலங்களவை உறுப்பினர் எஸ் கல்யாணசுந்தரம், சட்டப்பேரவை உறுப்பினர்கள் துரை. சந்திரசேகரன், டி.கே.ஜி. நீலமேகம், மேயர் சண். ராமநாதன், துணை மேயர் அஞ்சுகம் பூபதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா? இணையதளம் மூலம் அறியலாம்!

கான்வே 2-ஆவது இரட்டைச் சதம்; நியூஸிலாந்து 575/8-க்கு ‘டிக்ளோ்’

இறுதி ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் பலப்பரீட்சை

தேசிய துப்பாக்கி சுடுதல்: லக்ஷிதா, ஷா்வன் இணைக்கு தங்கம்

சென்னையில் 14.25 லட்சம் வாக்காளா்கள் நீக்கம்

SCROLL FOR NEXT