தமிழ்நாடு

பல்லடம் அருகே காமநாயக்கன்பாளையத்தில் கைத்தறி நெசவாளர்கள் போராட்டம்

DIN

பல்லடம் அருகே காமநாயக்கன்பாளையத்தில் கைத்தறி நெசவாளர்கள் போராட்டம் நடத்தினர்.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள காமநாயக்கன்பாளையத்தில் வசித்து வருகின்ற  250க்கும் மேற்பட்ட கைத்தறி நெசவாளர்கள் அங்குள்ள கிளை தபால் நிலையத்திலிருந்து தமிழக முதல்வருக்கு தபால் அனுப்பும் போராட்டம் நடத்தினர். 

அந்த மனுவில், கைத்தறிக்கு என்று ஒதுக்கப்பட்ட ரகங்களை அது நவீன விசைத்தறிகள் மூலம் வேட்டி, சேலைகள் உற்பத்தி செய்வதால் கைத்தறி சேலைகளின் விற்பனை அதிகப்படியாக குறைந்து அதிக அளவில் சேலைகள் முடங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. 

கரை போட்ட வேட்டி, சேலை ரகங்களை தயாரிப்பதற்கான உரிமையை அரசு கைத்தறி நெசவாளர்களுக்கு ஒதுக்கியிருந்தது. ஆனால் அரசு ஊழியர்களின் மெத்தன தன்மையால் தற்போது அதனை விசைத்தறியாளர்கள் உற்பத்தி செய்து வருகின்றனர். 

மீண்டும் அதை கைத்தறி நெசவாளர்களே உற்பத்தி செய்ய வழிவகை செய்து தர வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கைத்தறி நெசவாளர்கள் 250க்கும் மேற்பட்டோர் காமநாயக்கன்பாளையம் தபால் அலுவலகத்தில் இருந்து தபால் அனுப்பும் போராட்டம்  திங்கள்கிழமை நடத்தினர். 

இப்போராட்டத்திற்கு சூலூர் சட்டப்பேரவை உறுப்பினர் கந்தசாமி ஆதரவு தெரிவித்து பேசினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிரதமர் மோடிக்கு இருக்கும் காழ்ப்பின் வெளிப்பாடுதான் அவரது இரட்டை வேடம்: முதல்வர்

ஜூன் 28-ல் ஈரான் அதிபர் தேர்தல்!

நவீன வசதிகளுடன் பிராட்வே பேருந்து நிலையம்....மாதிரி புகைப்படம் வெளியீடு....

போதையில் கார் ஓட்டி இருவர் பலியாக காரணமான சிறுவன்: நடந்தது என்ன?

ஷெங்கன் விசா கட்டணம் உயர்வு... ஐரோப்பா செல்பவர்கள் கவனத்திற்கு!

SCROLL FOR NEXT