தமிழ்நாடு

பென்னாகரம்: வெள்ளை நிறத்தில் அரியவகை பாம்பு!

சாலைப் பணி மேற்கொள்ளும் போது  குட்டையில் இருந்து அரிய வகை வெள்ளை நிறப் பாம்பு வெளியேறி வனப்பகுதிக்குள் சென்றதை பொதுமக்கள் வியப்புடன் பார்த்தனர்.

DIN


பென்னாகரம்:  பென்னாகரம் அருகே சாலைப் பணி மேற்கொள்ளும் போது அருகில் இருந்த நீர் குட்டையில் இருந்து அரிய வகை வெள்ளை நிறப் பாம்பு வெளியேறி வனப்பகுதிக்குள் சென்றதை பொதுமக்கள் வியப்புடன் பார்த்தனர்.

பென்னாகரம் அருகே கரியம்பட்டி - முதுகம்பட்டி பகுதிகளுக்குச் செல்லக்கூடிய தார் சாலை பணி நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் நாய்க்கனேரி பகுதியில் சாலை சீரமைப்புப் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது, சாலையின் அருகே இருந்த நீர் குட்டையில் மிதந்து கொண்டிருந்த 8 அடி நீளம் கொண்ட அரிய வகை வெள்ளை நிற பாம்பு ஜேசிபி இயந்திரத்தின் அதிக இரைச்சல் மற்றும் மண் தோண்டும் போது ஏற்பட்ட அதிர்வுகளால் வெளியேறி சாலை அமைக்கும் இடங்களில் ஊர்ந்து அருகில் உள்ள வனப்பகுதிக்குள் சென்றது.

சாலையில் ஊர்ந்து சென்ற அரிய நிறப் வெள்ளை நிறப் பாம்பை பணியாளர்கள் செல்லிடை பேசியில் படம் எடுத்து சமூக வலைத்தளங்களில் வேகமாக பரப்பி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விவசாயிகள் சுதேசி பொருள்களைப் பயன்படுத்த வேண்டும்: அமித் ஷா

இந்த வாரம் கலாரசிகன் - 05-10-2025

கம்பனின் தமிழமுதம் - 65: காற்றுக் கொந்தளிப்பில் விமானங்கள்!

தன்னை வியத்தலினால் கேடு

போரை நிறுத்திய புலவர்கள்!

SCROLL FOR NEXT