அடுத்த 3 மணிநேரத்துக்கு 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!
தமிழகத்தில் உள்ள 9 மாவட்டங்களில் இரவு 7 மணிவரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை: தமிழகத்தில் உள்ள 9 மாவட்டங்களில் இரவு 7 மணிவரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக தமிழகத்தில் இன்று 10 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இரவு 7 மணிவரை திருவள்ளூர், செங்கல்பட்டு, புதுக்கோட்டை, சேலம், திருப்பூர், கோவை, நீலகிரி மாவட்டங்களில் மிதமான மழையும், ஈரோடு மற்றும் ராமநாதபுரத்தில் காற்றுடன் மழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.