இருசக்கர வாகன விபத்தில் நூலிழையில் உயிர் தப்பிய கல்லூரி மாணவனின் சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.
வேலூர் மாவட்டம் குடியாத்தம், காந்திநகர் பகுதியில் உள்ள அரசுக் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வரும் மாணவன் ஹரிதாஸ், இருசக்கர வாகனத்தில் கல்லூரிக்கு வந்து கொண்டிருந்தபோது, காட்பாடியில் இருந்து குடியாத்தம் நோக்கி வந்த வேன் இருசக்கர வாகனம் மீது நேருக்கு நேர் மோதியதில் கல்லூரி மாணவன் படு காயம் அடைந்தார்.
இந்த சம்பவம் குறித்து உடனடியாக குடியாத்தம் நகர காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த குடியாத்தம் காவல் துறையினர் மற்றும் அங்கிருந்த பொதுமக்கள், மாணவனை 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதையும் படிக்க: பிரதமர் மோடி நாளை(ஜூலை 13) பிரான்ஸ் பயணம்!
மேலும் இந்த சம்பவம் குறித்து குடியாத்தம் நகர காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தற்போது விபத்து நடந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.