தமிழ்நாடு

சென்னையில் நவீன வசதிகளுடன் கல்லூரி விடுதிக் கட்டடம்: முதல்வர் அடிக்கல் நாட்டினார்!

ஆதிதிராவிடர் மற்றம் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் சென்னை சைதாப்பேட்டை எம்.சி.ராஜா கல்லூரி மாணவர் விடுதி வளாகத்தில் ரூ.44.50 கோடி மதிப்பீட்டில் புதிய விடுதி கட்டும் பணிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின்

DIN

ஆதிதிராவிடர் மற்றம் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் சென்னை சைதாப்பேட்டை எம்.சி.ராஜா கல்லூரி மாணவர் விடுதி வளாகத்தில் ரூ.44.50 கோடி மதிப்பீட்டில் புதிய விடுதி கட்டும் பணிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.

இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: 

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (12.7.2023) ஆதிதிராவிடர் மற்றம் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் சென்னை மாவட்டம், சைதாப்பேட்டையில் எம்.சி.ராஜா கல்லூரி மாணவர் விடுதி வளாகத்தில் தற்போது காலியாகவுள்ள இடத்தில் 10 தளங்களுடன் 44 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள மாணவர் விடுதிக் கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டினார்.

தமிழ்நாட்டின்  பிற  மாவட்டங்களிலிருந்து உயர்கல்வி பயில சென்னைக்கு வருகை தரும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்கள் தங்கிக் கல்வி பயில ஏதுவாக, சென்னை மாவட்டம், சைதாப்பேட்டையில் எம்.சி.ராஜா கல்லூரி மாணவர் விடுதி கட்டப்பட்டு, முன்னாள் முதலமைச்சர் காமராஜரால் 15.12.1961 அன்று திறந்து வைக்கப்பட்டது. இதுவரையில் சுமார் 25,000 மாணவர்கள் அந்த விடுதியில் தங்கி உயர் கல்வி பெற்று பயனடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

2022-23 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில், சென்னை, எம்.சி. ராஜா கல்லூரி விடுதி வளாகத்தில் தற்போது காலியாகவுள்ள இடத்தில் சுமார் 1,01,101 சதுர அடி பரப்பளவில் 10 தளங்களுடன் நவீன வசதிகளுடன் கூடிய மாணவர் விடுதிக் கட்டடம் கட்டப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

அந்த அறிவிப்பிற்கிணங்க, சென்னையில் உள்ள பல்வேறு உயர்கல்வி நிறுவனங்களில் சேர்ந்து பொறியியல், தொழில்நுட்பம், கலை மற்றும் அறிவியல் துறைகளில் பயின்று வரும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் உயர்ந்து வருவதால் அவர்களது தங்குமிடத் தேவையை பூர்த்தி செய்யவும், அவர்களது திறனை மேம்படுத்தவும் எம்.சி.ராஜா விடுதி வளாகத்தில் புதியதாக மொத்தம் 1,01,101 சதுர அடி பரப்பளவில்  484 மாணவர்கள் தங்குமளவிற்கு தரைத்தளம் மற்றும் 10 தளங்களுடன் கூடிய  121 தங்கும் அறைகள், நூலகம், உடற்பயிற்சிக்கூடம், பார்வையாளர் அறை, பன்னோக்கு அரங்கம் ஆகிய நவீன வசதிகளுடன் 44 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் விடுதிக் கட்டடம் கட்டும் பணிக்கு முதல்வரால் இன்றைய தினம் அடிக்கல் நாட்டப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில், உயர்கல்வித் துறை அமைச்சர் முனைவர் க. பொன்முடி, பொதுப்பணித் துறை அமைச்சர் திரு.எ.வ. வேலு, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், ஆதிதிராவிடர் நலத் துறை அமைச்சர் என். கயல்விழி செல்வராஜ், பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் ஆர். பிரியா, நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன், துணை மேயர் மு. மகேஷ் குமார், பொதுப்பணித் துறை முதன்மைச் செயலாளர்  பி. சந்தர மோகன், இ.ஆ.ப., ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை செயலாளர் க. லட்சுமி பிரியா, இ.ஆ.ப., தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகத்தின் தலைவர் உ.மதிவாணன், ஆதிதிராவிடர் நலத்துறை இயக்குநர் த. ஆனந்த், இ.ஆ.ப., சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர் மு. அருணா, இ.ஆ.ப., பழங்குடியினர் நல இயக்குநர் எஸ். அண்ணாதுரை மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மன்னிக்க முடியாத குற்றம்!

2-ஆவது மாதமாக எதிர்மறையில் மொத்த விலை பணவீக்கம்

தருமபுரம் ஆதீனம் தனுா் மாத வழிபாடு தொடக்கம்

மன்ரேகா திட்டத்தின் பெயா் மாற்றத்திற்கு எதிராக சென்னையில் போராட்டம்

1971 போா் வெற்றி தினம்: உயிா் நீத்த வீரா்களுக்கு குடியரசுத் தலைவா், பிரதமா் மரியாதை

SCROLL FOR NEXT