செந்தில் பாலாஜிக்கு ஜூலை 26 வரை நீதிமன்ற காவல்!
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜூலை 26ஆம் தேதி வரை நீதிமன்ற காவலை நீட்டித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜூலை 26ஆம் தேதி வரை நீதிமன்ற காவலை நீட்டித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஏற்கெனவே விதிக்கப்பட்டிருந்த நீதிமன்ற காவல் முடிந்த நிலையில், 2வது முறையாக காவலை நீட்டித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சட்டவிரோத பணப் பரிவர்த்தனை தடுப்புச் சட்ட வழக்கில் கடந்த ஜூன் 14ஆம் தேதி அமலாக்கத் துறை அதிகாரிகளால் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார்.
அமைச்சா் செந்தில் பாலாஜியை விடுவிக்கக் கோரி அவரது மனைவி மேகலா ஆள்கொணா்வு மனு தாக்கல் செய்தார். அந்த மனு மீதான விசாரணை மூன்றாவது நீதிபதி சி.வி.காா்த்திகேயன் முன்பு நடைபெற்றது. கடந்த திங்கள் கிழமை வழக்கு நடைபெற்று ஒத்திவைக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து இன்று செந்தில் பாலாஜி தரப்பில் மூத்த வழக்குரைஞர் கபில் சிபல், அமலாக்கத் துறை தரப்பில் வழக்குரைஞர் துஷார் மேத்தா வாதங்களை முன்வைத்தனர்.