கோப்புப் படம் 
தமிழ்நாடு

திமுக எம்.பி.க்கள் கூட்டம்: முக்கிய விவகாரங்கள் ஆலோசனை!

முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில், திமுக எம்.பி.க்கள் ஆலோசனைக் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. 

DIN

முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில், திமுக எம்.பி.க்கள் ஆலோசனைக் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. 

சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்று வரும் இந்தக் கூட்டத்தில் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் விவாதிக்க வேண்டிய விஷயங்கள் குறித்து ஆலோசிக்கப்படவுள்ளது.

இந்தக் கூட்டத்தில் டி.ஆர். பாலு, கனிமொழி, ஆ.ராசா, உள்ளிட்ட மாநிலங்களவை, மக்களவை உறுப்பினர்கள் கலந்துகொண்டுள்ளனர்.

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் திமுக சார்பில் எழுப்ப வேண்டிய முக்கிய பிரச்னை குறித்து விவாதிக்கப்படவுள்ளது. குறிப்பாக மத்திய அரசு கொண்டுவரவுள்ள பொது சிவில் சட்டத்தை திரும்பப் பெற வேண்டும் என்பது உள்ளிட்ட பிரச்னைகள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது

அரசியலமைப்பு சட்டத்தை மீறி ஆளுநர் செயல்பட்டு வருவதாக முதல்வர் தெரிவித்திருந்த நிலையில், ஆளுநர் விவகாரம் தொடர்பாகவும் ஆலோசிக்கப்படும் எனத் தெரிகிறது.

மேலும், விலைவாசி உயர்வு, இலங்கை எல்லையில் தமிழக மீனவர்களின் கைது உள்ளிட்டவை குறித்தும் ஆலோசனை கூட்டத்தில் விவாதிக்கப்படுகிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

“ஆண்டுகள் எத்தனை ஆனாலும், தமிழ்நாட்டை அண்ணாதான் ஆள்கிறார்” - முதல்வர் ஸ்டாலின்!

சுப செலவுகள் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

ஊழல் வழக்கில் ஷேக் ஹசீனாவுக்கு 10 ஆண்டுகள் சிறை: வங்கதேச நீதிமன்றம் தீா்ப்பு

பிகாா் சட்டப்பேரவைக்கு சக்கர நாற்காலியில் வந்த தேஜஸ்வி யாதவ்!

அரியலூரில் பறிமுதல் வாகனங்கள் பிப்.12-இல் ஏலம்

SCROLL FOR NEXT