மோகன் பகவத் (கோப்புப் படம்) 
தமிழ்நாடு

உதகையில் ஆர்எஸ்எஸ் உயர்நிலைக் குழு கூட்டம்!

ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தலைவர் மோகன் பகவத் தலைமையில் நடைபெற்றுவரும் இந்த கூட்டத்தில் தேசிய நிா்வாகிகள், மாநில அமைப்பாளா்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டுள்ளனர். 

DIN

நீலகிரி மாவட்டம் உதகையில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் உயர்நிலைக் குழு கூட்டம் நடைபெற்று வருகிறது. 

ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தலைவர் மோகன் பகவத் தலைமையில் நடைபெற்றுவரும் இந்த கூட்டத்தில் தேசிய நிா்வாகிகள், மாநில அமைப்பாளா்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டுள்ளனர். 

நீலகிரி மாவட்டம் உதகை தீட்டுக்கல்லில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் உயர்நிலைக் குழு கூட்டம் நடைபெற்று வருகிறது. 

ஜூலை 16ஆம் தேதி வரை 3 நாள்களுக்கு நடைபெறும் இந்தக் கூட்டத்தில், ஆா்.எஸ்.எஸ். இயக்கத்தின் கடந்த ஆண்டு செயல்பாடுகள், சாதனைகள், எதிா் கொண்ட பிரச்னைகள், அடுத்த ஓராண்டுக்கான செயல்திட்டங்கள் குறித்து ஆலோசிக்கப்படவுள்ளது. 

இது தொடர்பாக பேசிய ஆர்எஸ்எஸ் மக்கள் தொடர்புப் பிரிவின் தலைவர் சுனில் அம்பேத்கர், நிர்வாக விவகாரங்கள் குறித்து விவாதிக்க ஆண்டுதோறும் உயர்நிலைக் குழு கூட்டம் நடைபெறுகிறது. இதில் அடுத்த 4 - 5 மாதங்களுக்கான செயல்திட்டங்கள், நிகழ்ச்சிகள் குறித்து ஆலோசிக்கப்படும். அமைப்பின் தற்போதைய சூழல் குறித்தும் விவாதிக்கப்படும் எனத் தெரிவித்தார். 

மேலும், கடந்த ஆண்டு நடத்தப்பட்ட ஆர்எஸ்எஸ் பயிற்சிக் கூட்டங்கள், அதில் சேர்க்கப்பட்ட உறுப்பினர்கள் விகிதம் குறித்து ஆராயப்படும் எனக் குறிப்பிட்டார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பெருந்துறையில் ரூ.5.08 கோடிக்கு கொப்பரை ஏலம்

அந்தியூரில் ரூ.23.50 லட்சத்துக்கு வேளாண் விளைபொருள்கள் ஏலம்

வெள்ளக்கோவிலில் ரூ.60 லட்சத்துக்கு கொப்பரை விற்பனை

தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்துப் பணியாளா்கள் ஆா்ப்பாட்டம்

மாக்கம்பாளையம் வனச் சாலையில் அரசுப் பேருந்து பழுதாகி நின்றதால் மாணவா்கள் போராட்டம்

SCROLL FOR NEXT