தமிழ்நாடு

ஆடி மாத பூஜை: சபரிமலை ஐயப்பன் கோயில் ஜூலை 16-ல் திறப்பு!

DIN

ஆடி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை ஜூலை 16-ம் தேதி  மாலை 5.00 மணிக்கு திறக்கப்படுகிறது. 

கேரளத்தில் பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயில் மண்டல, மகரவிளக்கு பூஜை தவிர தமிழ் மாதப் பிறப்பையொட்டி முதல் 5 நாள்கள் நடை திறக்கப்பட்டு சிறப்புப் பூஜைகள் வழிபாடுகள் நடைபெறுவது வழக்கம். 

இந்நிலையில், ஆடி மாத பூஜைக்காக ஜூலை 17(ஞாயிற்றுக்கிழமை) மாலை நடை திறக்கப்படுகிறது. தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில் மேல்சாந்தி ஜெயராமன் நம்பூதிரி நடையை திறந்துவைத்து குத்துவிளக்கு ஏற்றி தீபாராதனை நடத்துகிறார். 

பின்னர், ஜூலை 17-ம் தேதி முதல் 21-ம் தேதி வரை 5 நாள்கள் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள். வழக்கான பூஜைகளுடன், நிர்மால்ய தரிசனம், கணபதி ஹோமம், நெய் அபிஷேகம், உஷ பூஜை, உச்ச பூஜை, தீபாராதனை, புஷ்பாபிஷேகம், களசாபிஷேகம், சகஸ்ர காசாபிஷேகம், படி பூஜை, உதயாஸ்தமன பூஜை ஆகியவை நடைபெறும். 

ஜூன் 21-ம் தேதி இரவு 10 மணியளவில் கோயிலின் நடை அடைக்கப்படும். வழக்கமாக ஆன்லைன் முன்பதிவு மூலம் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாஜக வெற்றி பெற்றால் 2025 முதல் அமித் ஷாவே பிரதமர்: கேஜரிவால்

வாலாஜாப்பேட்டை அருகே தனியார் தொழிற்சாலை பேருந்து விபத்து: 18 தொழிலாளர்கள் படுகாயம்

வள்ளியூரில் ரயில்வே சுரங்கப் பாதையில் சிக்கிய அரசுப் பேருந்து: ஓட்டுநர் பணியிடை நீக்கம்

தங்கம் விலை அதிரடி உயர்வு: இன்றைய நிலவரம்

ஸ்லோவாகியா பிரதமர் மீது துப்பாக்கிச்சூடு: மோடி கண்டனம்

SCROLL FOR NEXT