அமைச்சர் செந்தில் பாலாஜி டிஸ்சார்ஜ்! புழல் சிறைக்கு மாற்றம்!!
சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த அமைச்சர் செந்தில் பாலாஜி டிஸ்சார்ஜ் செய்து, புழல் சிறைக்கு மாற்றுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த அமைச்சர் செந்தில் பாலாஜி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு, புழல் சிறைக்கு அழைத்துச்செல்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளார்.
இதய அறுவை சிகிச்சைக்குப் பிறகு மருத்துவமனையிலிருந்தவாறு சிகிச்சை பெற்றுவந்த நிலையில், தற்போது மருத்துவமனையிலிருந்து மாற்றப்பட்டுள்ளார்.
கடந்த ஜூன் 21ஆம் தேதி காவேரி மருத்துவமனையில் செந்தில் பாலாஜிக்கு இதய அறுவை (பைபாஸ்) சிகிச்சை செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து மருத்துவமனையிலிருந்தவாறு அவர் சிகிச்சை பெற்றுவந்தார். தற்போது செந்தில் பாலாஜியின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதால், மருத்துவமனையிலிருந்து மாற்ற ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாகத் தெரிகிறது.
மருத்துவமனையிலிருந்து அவசர ஊர்தி வாயிலாக செந்தில் பாலாஜியை அழைத்துச்செல்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்படுவதாக மருத்துவமனை தரப்பில் தகவல் வெளியாகியுள்ளது.