மன்னார்குடியில் வீட்டின் பூட்டை உடைத்து 80 சவரன் நகைகள், வெள்ளிப் பொருள்களை மர்மநபர்கள் திருடிச் சென்றுள்ளனர்.
திருவாரூர் மாவIட்டம், மன்னார்குடி புதிய புறவழிச் சாலையில் அடுக்கு மாடி குடியிருப்பில் தரைத் தளத்தில் வசித்து வருபவர் நடராஜன் மகன் ராமமூர்த்தி(43). இவர், தனியார் ஒப்பந்ததாரராக உள்ளார். கடந்த 14ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) வீட்டை பூட்டி விட்டு தனது குடும்பத்தினருடன் திருப்பதி கோயிலுக்கு சென்றுள்ளார். மீண்டும், ஞாயிற்றுக்கிழமை இரவு ஊருக்கு திரும்பியவர் வீட்டுக்கு வந்து பார்த்தப் போது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
வீட்டினுள்ளே சென்று பார்த்த போது பீரோவும் உடைக்கப்பட்டு அதிலிருந்த 80 சவரன் நகைகள், வெள்ளிப் பொருள்கள், பட்டுப் புடவைகள் உள்ளிட்டவைகளை மர்ம நபர்கள் திருடி சென்றிருப்பது தெரிய வந்தது. இது குறித்து, மன்னார்குடி காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் நிகழ்விடத்திற்கு வந்த போலீஸார், ராமமூர்த்தி மற்றும் அப்பகுதியில் குடியிருப்பவர்களிடம் விவரங்களை கேட்டறிந்தனர்.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டி.பி.சுரேஷ்குமார் உத்தரவின் பேரில் துணைக் காவல் கண்காணிப்பாளர் அ.அஸ்வத் ஆட்டோ திருட்டு நடைபெற்ற வீட்டை பார்வையிட்டார். மன்னார்குடி போலீஸார் வழக்கு செய்து தனிப்படை அமைத்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர். திருட்டு நடைபெற்ற வீட்டில் தஞ்சையிலிருந்து வந்த தடயவியல் நிபுணர்கள் தடயங்களை சேகரித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.