தமிழ்நாடு

நகைக் கடை உரிமையாளர் தற்கொலை வழக்கு: கோட்டாட்சியர் விசாரணை! 

பட்டுக்கோட்டை நகை கடை உரிமையாளர் தற்கொலை தொடர்பாக கோட்டாட்சியர் விசாரணை வருகிற 27ஆம் தேதி நடைபெறுகிறது.

DIN


பட்டுக்கோட்டை: பட்டுக்கோட்டை நகை கடை உரிமையாளர் தற்கொலை தொடர்பாக கோட்டாட்சியர் விசாரணை வருகிற 27ஆம் தேதி நடைபெறுகிறது.

விருப்பம் உள்ளவர்கள் சாட்சியம் அளிக்கலாம் என கோட்டாட்சியர் அ. அக்பர்அலி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் செவ்வாய்க்கிழமை அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: 

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை வட்டம் மற்றும் நகரம் தேரடி தெருவில் ரோஜா நகைக்கடை நடத்தி வந்த உரிமையாளர் ராஜசேகர்(62) என்பவர் செட்டியக்காடு என்ற இடத்தில் வேளாங்கண்ணி - எர்ணாகுளம் செல்லும் ரயிலின் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக காவல் நிலைய ஆணையின் 151 கீழ் விசாரணை நடத்த தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரால் ஆணையிடப்பட்டுள்ளது.

அதன்படி பட்டுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் ஜூலை 25 அன்று செவ்வாய்க்கிழமை மாலை 4 மணிக்கு பட்டுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் மற்றும் உட்கோட்ட நடுவரால் விசாரணை நடத்தப்பட உள்ளது. 

எனவே, ராஜசேகர் என்பவரின் மரணத்தில் காவல்துறையினரின் துன்புறுத்தல், அச்சுறுத்தல் மற்றும் அத்துமீறல் ஏதேனும் நிகழ்ந்துள்ளதா என்பது குறித்து விரிவான விசாரணை நடைபெற உள்ளதால் இச்சம்பவம் தொடர்பாக விவரங்கள் தெரிவிக்க விரும்புகிறவர்கள் மேற்படி நாட்களில் பட்டுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் மற்றும் உட்கோட்ட நடுவரின் நேரில் சாட்சியம் அளிக்கலாம் என இதன் மூலம் பொது மக்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. சாட்சியம் அளித்த தகவல்களுக்கான ரகசியங்கள் பாதுகாக்கப்படும் எனவும் இதன் மூலம் அறிவிக்கப்படுகிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பெங்களூரு - திருவனந்தபுரம் இடையே வாராந்திர சிறப்பு ரயில்

கோவையில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்கள்

காலமானாா் ஓ.எம்.துரைசாமி

பதிவு செய்யப்படும் பத்திரங்களை அன்றே வழங்கிட வேண்டும்

கீழ்பவானி வாய்க்கால் பழைய கட்டுமானங்களை ஆய்வு செய்ய ஏற்பாடு: அமைச்சா் சு.முத்துசாமி

SCROLL FOR NEXT