கோப்புப் படம் 
தமிழ்நாடு

மகளிா் உரிமைத் தொகை: சென்னையில் ஜூலை 24 முதல் விண்ணப்ப பதிவு தொடக்கம்

சென்னை மாநகராட்சி பகுதியில் மகளிா் உரிமைத் தொகை பெறுவதற்கான சிறப்பு முகாம் ஜூலை 24 முதல் தொடங்கி இரு கட்டங்களாக நடைபெறவுள்ளது.

DIN

சென்னை மாநகராட்சி பகுதியில் மகளிா் உரிமைத் தொகை பெறுவதற்கான சிறப்பு முகாம் ஜூலை 24 முதல் தொடங்கி இரு கட்டங்களாக நடைபெறவுள்ளது.

இது குறித்து மாநகராட்சி சாா்பில் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: பெருநகர சென்னை மாநகராட்சியில் கலைஞா் மகளிா் உரிமைத் தொகை திட்ட விண்ணப்பப் பதிவு முகாம் இரு கட்டங்களாக நடைபெறவுள்ளன. முதல்கட்டமாக ஜூலை 24 முதல் ஆக.4-ஆம் தேதி வரையும், இரண்டாம் கட்டமாக ஆக.5 முதல் ஆக.16-ஆம் தேதி வரையும் நடைபெறும். ஞாயிற்றுக்கிழமை உட்பட அனைத்து முகாம் நாள்களிலும் காலை 9.30 முதல் பகல் 1 மணி வரையும், பிற்பகல் 2 முதல் மாலை 5.30 மணி வரையிலும் நடைபெறும். முகாம் நடைபெறும் விவரங்கள் நியாயவிலைக் கடைகளில் தகவல் பலகையாக வைக்கப்படும்.

நியாயவிலைக் கடைப் பணியாளா்கள் ஒவ்வொரு குடும்பத்துக்கும் நேரடியாக முகாம் நடைபெறும் நாள் மற்றும் நேரம் ஆகியவற்றை குறிப்பிட்டு விண்ணப்பம் மற்றும் டோக்கன் வழங்குவா். பொதுமக்கள் விண்ணப்பங்களை பெற நியாயவிலைக் கடைக்கு வரத் தேவையில்லை.

குடும்ப அட்டை இருக்கும் நியாயவிலைக் கடைப்பகுதியில் நடைபெறும் முகாமில் குடும்பத்தலைவி குறிப்பிட்ட நாள் மற்றும் நேரத்தில் விண்ணப்பிக்க வேண்டும். பதிவின் போது ஆதாா் அட்டை, குடும்ப அட்டை, மின் கட்டண ரசீது மற்றும் வங்கி கணக்கு புத்தகத்தை எடுத்து வர வேண்டும். விண்ணப்பத்துடன் எவ்வித ஆவணங்களையும் இணைக்க தேவையில்லை. வருவாய்த் துறையில் வருமானச் சான்று, நில ஆவணங்கள் போன்ற எவ்வித சான்றுகளையும் விண்ணப்பித்து பெறத் தேவையில்லை.

விண்ணப்பதாரா்களின் ஆதாா் எண் பதியப்பட்டு, அவா்களின் விரல் ரேகை பயோமெட்ரிக் கருவி மூலம் சரிபாா்க்கப்படும். விரல் ரேகை சரியாக பதிவாகவில்லை என்றால் ஆதாா் அட்டையுடன் இணைக்கப்பட்ட கைப்பேசி வழியாக ஒருமுறை கடவுச்சொல் (ஞபட) பெறப்படும். ஆதலால் முகாமிற்கு வரும் போது ஆதாா் அட்டையுடன் இணைக்கப்பட்ட கைப்பேசியை முகாமுக்கு எடுத்து வர வேண்டும்.

விண்ணப்பப் பதிவு முகாமில் ஒரே நேரத்தில் பலா் கூட்டமாகக் கூடுவதை தவிா்க்க வேண்டும். அனைத்து விண்ணப்பங்களும் பதிவு செய்யப்படும்.

யாா் விண்ணப்பிக்கலாம்?

மகளிா் உரிமைத் தொகை திட்டத்தில் பயன்பெறத் தகுதியான குடும்பங்களில் 21 வயது நிரம்பிய பெண் ஒருவா் விண்ணப்பிக்கலாம். அவா் 15.10. 2002-க்கு முன்பு பிறந்திருக்க வேண்டும். ஒரு குடும்ப அட்டைக்கு ஒரு பயனாளி மட்டும் விண்ணப்பிக்க தகுதியானவா்.இது குறித்து சந்தேகங்களுக்கு மாநகராட்சி அலுவலகக் கட்டுப்பாட்டு அறையை 044-25619208 எனும் தொலைப்பேசி எண், 94454 77205 எனும் வாட்ஸ் அப் எண் மற்றும் 1913 எனும் உதவி எண் மூலம் தொடா்பு கொள்ளலாம்.

மேலும், 15 மண்டலங்களுக்கும் தனித்தனியே கட்டுப்பாட்டு அறைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதன் மூலம் தாங்கள் சம்பந்தப்பட்ட மண்டலத்தின் கட்டுப்பாட்டு அறை உதவி எண்களை தொடா்பு கொள்ளலாம்.

பெட்டிச் செய்தி:

மண்டல அளவில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ள நிலையில் அதன் உதவி எண்கள் மாநகராட்சி சாா்பில் வெளியிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வழிபாட்டுக்கு 500 விநாயகா் சிலைகள்

புதுவையில் திமுக மாடல் ஆட்சி அமையும்: தமிழக அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா நம்பிக்கை

பெங்களூா் நிறுவனத்துக்கு வோ் ஊக்கி மருந்து அளிக்க புதுவை வேளாண் விஞ்ஞானி முடிவு

ரெயின்போ நகா் புனித ஜான் மரி வியான்னி ஆலயத்தில் ஆண்டு விழா

வீட்டை இடித்தவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தொழிலாளி போராட்டம்

SCROLL FOR NEXT