தமிழ்நாடு

முதல், இரண்டாம் நிலை சிறைக் காவலர்களுக்கு மிகை நேர பணிக்கான ஊதியம் உயர்வு: அரசாணை வெளியீடு 

முதல் மற்றும் இரண்டாம் நிலை சிறைக் காவலர்களுக்கு மிகை நேர பணிக்கான ஊதியம் உயர்வுக்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது தமிழ்நாடு அரசு. 

DIN



சென்னை: முதல் மற்றும் இரண்டாம் நிலை சிறைக் காவலர்களுக்கு மிகை நேர பணிக்கான ஊதியம் உயர்வுக்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது தமிழ்நாடு அரசு. 

கடந்த ஏப்ரல் மாதம் 27 ஆம் தேதி சட்டப்பேரவையில் சிறைகள் மற்றும் சீர்த்திருத்த பணிகள் துறையின் கீழ் புதிய அறிவிப்புகளை வெளியிட்ட அமைச்சர் ரகுபதி, சிறைகள் மற்றும் சீர்த்திருத்த பணிகள் துறையில் பணிபுரியும் முதல் மற்றும் இரண்டாம் நிலை சிறைக் காவலர்களுக்கு மிகை நேர பணிக்கான ஊதியம் காவல்துறை ஆளிநர்களுக்கு இணையாக ரூ.200 இல் இருந்து ரூ.500 ஆக உயர்த்தி வழங்கப்படும். இடர் படி ரூ.800 இல் இருந்து  ரூ.1000 ஆக உயர்த்தி வழங்கப்படும் என அறிவித்தார். 

இந்த நிலையில் தமிழக சிறைகளில் பணியாற்றும் முதல் மற்றும் இரண்டாம் நிலை காவலர்களுக்கான மிகைநேர பணிக்கான ஊதியம் உயர்வுக்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது தமிழ்நாடு அரசு. 

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அரசாணையில்,  சிறைத்துறையில் பணியாறும் முதல் மற்றும் இரண்டாம் நிலை காவலர்களுக்கான மிகை நேர பணிக்கான ஊதியம் காவல் தறை கவாலர்களுக்கு ரூ.200 இல் இருந்து ரூ.500 ஆக உயர்த்தப்படும். இதற்காக ரூ.3.24 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிட்னி கடற்கரையில் துப்பாக்கிச்சூடு நடத்தியவர்கள் தந்தை, மகன்: போலீஸ் தகவல்

ஆஸ்திரேலிய பயங்கரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 16 ஆக உயர்வு!

சாணைக்கல்லில் சிந்து எழுத்துகள்: தூத்துக்குடி பட்டினமருதூரில் கண்டெடுப்பு

எல்லீஸ் நகா் பகுதியில் நாளை மின் தடை

வாக்காளா் பட்டியல் தீவிர திருத்தம்: கணக்கீட்டுப் படிவம் பெறும் பணி நிறைவு!

SCROLL FOR NEXT