தமிழ்நாடு

முதல்வர் ஸ்டாலினுடன் பொன்முடி சந்திப்பு!

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து அமைச்சர் பொன்முடி ஆலோசனை நடத்தினார்.

DIN

சென்னை: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி ஆலோசனை நடத்தினார்.

செம்மண் குவாரி முறைகேடு தொடா்பாக சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் அமைச்சர் பொன்முடி, அவரது மகனும் எம்பியுமான கெளதம சிகாமணி ஆகியோருக்குச் சொந்தமான 9 இடங்களில் திங்கள்கிழமை காலை ஒரே நேரத்தில் சோதனை செய்தனா். 

இதனைத் தொடர்ந்து அமலாக்கத்துறை அலுவலகத்துக்கு அழைத்துச் சென்று பொன்முடியிடம் திங்கள்கிழமை இரவு 5 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து, செவ்வாய்க்கிழமை மாலையும் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார்.

இந்நிலையில், பெங்களூருவில் நடைபெற்ற எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் பங்கேற்ற முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று இரவு சென்னை திரும்பியிருந்தார்.

இதனைத் தொடர்ந்து, சென்னையில் உள்ள முதல்வரின் இல்லத்தில் அமைச்சர் பொன்முடி நேரில் சந்தித்து அமலாக்கத்துறை சோதனை குறித்து ஆலோசனை நடத்தினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வங்கதேசம்: ஹிந்து இளைஞா் கொலையில் 7 போ் கைது

டாஸ்மாக் பணியாளா் பிரச்னைக்கு தீா்வு காண முதல்வா் பேச்சு நடத்த வேண்டும்: கு.பாலசுப்ரமணியன்

ஹிஸ்புல் முஜாஹிதீன் தலைவருக்கு எதிராக ஜாமீனில் வெளிவர இயலாத கைது ஆணை!

பல் மருத்துவப் படிப்பில் நீட் தகுதியை குறைக்கும் அதிகாரம் மாநில அரசுக்கு இல்லை: உச்சநீதிமன்றம்

நாகையில் பாய்மரப் படகு பயிற்சி மையம்: உதயநிதி தொடங்கிவைத்தாா்

SCROLL FOR NEXT