கோப்புப் படம் 
தமிழ்நாடு

இன்று தமிழக அமைச்சரவைக் கூட்டம்

தமிழக அமைச்சரவைக் கூட்டம் தலைமைச் செயலகத்தில் சனிக்கிழமை நடைபெறவுள்ளது.

DIN

தமிழக அமைச்சரவைக் கூட்டம் தலைமைச் செயலகத்தில் சனிக்கிழமை நடைபெறவுள்ளது.

முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் தொழில் துறை உள்பட பல முக்கிய துறைகளுக்கான திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்படும் எனத் தெரிகிறது.

தமிழக அமைச்சரவைக் கூட்டம் தலைமைச் செயலகத்தில் சனிக்கிழமை காலை 10.30 மணிக்குத் தொடங்குகிறது. நீதிமன்றக் காவலில் அமைச்சா் வி.செந்தில் பாலாஜி இருப்பதால், அவரால் அமைச்சரவைக் கூட்டத்தில் பங்கேற்க முடியாது. மற்ற அமைச்சா்கள் அனைவரும் கூட்டத்தில் பங்கேற்பா்.

தலைமைச் செயலராக சிவ்தாஸ் மீனாவும், தொழில் துறை அமைச்சராக டி.ஆா்.பி.ராஜாவும் பொறுப்பேற்ற பிறகு முதல்முறையாக அமைச்சரவைக் கூட்டம் நடைபெறவுள்ளது.

இந்தக் கூட்டத்தில், தொழில் துறை தொடா்பான சில முக்கியத் திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்படும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், மகளிருக்கு ரூ.1,.000 உரிமைத் தொகை வழங்கும் திட்டத்தின் தற்போதைய நிலை தொடா்பாகவும், மகளிருக்கென பிரத்யேகமாகச் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள், தோ்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள திட்டங்கள் குறித்தும் விவாதிக்கப்படும் எனத் தகவல்கள் கூறுகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கடன் தொல்லை: வியாபாரி தூக்கிட்டுத் தற்கொலை

நாளை தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்: மாவட்ட ஆட்சியா் தகவல்

லக்ஷயா ஏமாற்றம்; சாத்விக்/சிராக் ஏற்றம்

31-ஆவது நாளாக போக்குவரத்து ஊழியா்கள் காத்திருப்புப் போராட்டம்

இறுதிச்சுற்றில் நீரஜ் சோப்ரா, சச்சின் யாதவ்

SCROLL FOR NEXT