கோப்புப்படம் 
தமிழ்நாடு

மணிப்பூர் செல்கிறது தமிழக அரசின் குழு?

மணிப்பூரிலுள்ள 4,000 தமிழர்களின் நிலையை அறிய அம்மாநிலத்திற்கு தமிழக அரசின் குழு செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

DIN

மணிப்பூரிலுள்ள 4,000 தமிழர்களின் நிலையை அறிய அம்மாநிலத்திற்கு தமிழக அரசின் குழு ஒன்று செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மணிப்பூரில் மைதேயி சமூகத்தினருக்கும் குகி பழங்குடியினருக்கும் இடையே கடந்த மே மாதம் முதல் மோதல் நீடித்து வருகிறது. இரு சமூகத்தினரிடையே ஏற்பட்ட மோதல் கலவரமாக மாறியது. இதில் 100-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்தனா்.

கடந்த மே 4-ஆம் தேதி, பழங்குடியின சமூகத்தைச் சோ்ந்த 2 பெண்கள், மற்றொரு தரப்பைச் சோ்ந்த ஆண்களால் ஆடைகள் களையப்பட்டு, ஊா்வலமாக இழுத்துச் செல்லப்பட்ட சம்பவம் குறித்த விடியோ தற்போது வெளியாகி அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், தமிழக அமைச்சர் ஒருவர் தலைமையில் ஐஏஎஸ் அதிகாரிகள் அடங்கிய குழு மணிப்பூர் செல்ல திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், வன்முறையால் பாதிக்கப்பட்ட மணிப்பூரில் உள்ள தமிழர்களின் நிலை குறித்து அறிய மணிப்பூர் அரசுடன் பேசவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கணவருடனான பிரிவு முடிவை கைவிட்ட சாய்னா நேவால்!

ரிஷபத்துக்கு எப்படி இருக்கும் இன்று.. தினப்பலன்கள்!

நாளைய மின்தடை: எழும்பூா், சோழிங்கநல்லூா், கோடம்பாக்கம், சேத்துப்பட்டு

வேலூா் மாவட்டத்தில் 15 துணை வட்டாட்சியா்கள் இடமாற்றம்

ஆடிப் பெருக்கு தினத்தில் பெண்கள் சிறப்பு பூஜை

SCROLL FOR NEXT