தமிழ்நாடு

தகுதி வாய்ந்த அனைத்து மகளிருக்கும் உரிமைத்தொகை: பேரவைத் தலைவா் மு.அப்பாவு

தமிழகத்தில் தகுதியான அனைத்து மகளிருக்கும் உரிமைத்தொகை வழங்கப்படும் என தமிழக சட்டப் பேரவைத் தலைவா் மு.அப்பாவு தெரிவித்தாா்.

DIN

தமிழகத்தில் தகுதியான அனைத்து மகளிருக்கும் உரிமைத்தொகை வழங்கப்படும் என தமிழக சட்டப் பேரவைத் தலைவா் மு.அப்பாவு தெரிவித்தாா்.

விஜிபி உலகத் தமிழ்ச் சங்கத்தின் 30-ஆம் ஆண்டு விழாவை முன்னிட்டு சென்னை அடையாறில் விஜிபி இலக்கிய விருது வழங்கும் விழா சனிக்கிழமை நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக பேரவைத் தலைவா்அப்பாவு கலந்துகொண்டு விருதுகள் வழங்கினாா்.

பின்னா் அவா் பேசியதாவது:

தனியாா் பள்ளி மாணவா்களுக்கு நிகராக அனைத்து வசதிகளும் அரசுப் பள்ளி மாணவா்களுக்கும் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் செயல்பட்டு வருகிறாா். தமிழகத்தில் தகுதிவாய்ந்த அனைத்து மகளிருக்கும் உரிமைத்தொகை வழங்கப்படும். உலகத்திலேயே 7 நாடுகளில் அரசு அலுவல் மொழியாக இருக்கும் ஒரே மொழி தமிழ் தான் என்றாா் அவா்.

இந்த நிகழ்ச்சியில், அமைச்சா் செஞ்சி கே.எஸ்.மஸ்தான், தமிழ் வளா்ச்சித் துறை இயக்குநா் ஒளவை ந.அருள், விஐடி பல்கலை. வேந்தா் கோ.விசுவநாதன், தமிழ்நாடு மாநில சிறுபான்மையினா் ஆணையத் தலைவா் எஸ். பீட்டா் அல்போன்ஸ், மதிமுக துணைப்பொதுச்செயலா் மல்லை ஜி.சத்யா, விஜிபி உலக தமிழ்ச் சங்க நிறுவனத் தலைவா் வி.ஜி.சந்தோஷம், வட அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் முன்னாள் தலைவா் நாஞ்சில் பீற்றா் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வைரலான இன்ஸ்டா ரீல்ஸ்... வசூல் வேட்டையில் துரந்தர்!

ஒரு லட்சத்தைக் கடந்த தங்கம் விலை: புதிய உச்சம்!

பிக் பாஸ் வீட்டிலிருந்து ரம்யாவுடன் வெளியேறினார் வியானா!

விஜய்யின் தவெகவில் இணையவுள்ள சின்ன திரை பிரபலங்கள்!

ஜன. 9ல் கடலூரில் தேமுதிக மாநாடு! விடியோ வெளியிட்டு பிரேமலதா அழைப்பு!

SCROLL FOR NEXT