முகப்பு
முதல்வர் மு.க.ஸ்டாலின் (கோப்புப் படம்)
தமிழ்நாடு

காவல் நிலையங்களில் ரூ.10 கோடியில் வரவேற்பறை, காத்திருப்புக் கூடங்கள்!

காவல் நிலையங்களில் பொதுமக்கள் உடனான நல்லுறவை மேம்படுத்தும் வகையில் சிறப்பு வசதிகளை ஏற்படுத்த ரூ.10 கோடி வழங்கி முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். 

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 2:42 AM
முதல்வர் மு.க.ஸ்டாலின் (கோப்புப் படம்)
பகிர்:

காவல் நிலையங்களில் பொதுமக்கள் உடனான நல்லுறவை மேம்படுத்தும் வகையில் சிறப்பு வசதிகளை ஏற்படுத்த ரூ.10 கோடி வழங்கி முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். 

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், காவல் துறையினர் பொதுமக்களை நண்பர்களாகக் கருதி, அவர்களிடம் கண்ணியத்துடனும், கருணையுடனும் நடந்து கொள்வதை உறுதி செய்ய தமிழ்நாடு அரசு பல பயனுள்ள நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. 

 காவலர்கள் – மக்கள் தொடர்பை மேம்படுத்த காவல் பணியாளர்களுக்கு அண்ணா நிருவாகப் பணியாளர் கல்லூரி உதவியுடன் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது

அதன் ஒரு பகுதியாக, காவல் நிலையங்களை அணுகும் பொதுமக்களின் வசதிக்காக முதற்கட்டமாக 250 காவல் நிலையங்களுக்கு தலா 4 இலட்சம் ரூபாய் செலவில் வரவேற்பறை, பார்வையாளர்களுக்கான கழிப்பறைகள், குடிநீர் வசதிகள் மற்றும் காத்திருப்பு கொட்டகைகள் ஆகியவை மொத்தம் 10 கோடி ரூபாய் செலவில் கட்டப்படும் என சட்டப்பேரவையில் அறிவித்தார். 

இதை செயல்படுத்தும் வகையில், காவலர் மற்றும் பொதுமக்கள் நல்லுறவை மேம்படுத்தும் பொருட்டு 250 காவல் நிலையங்களில், வரவேற்பறை, பார்வையாளர்களுக்கான கழிப்பறைகள், குடிநீர் வசதிகள் மற்றும் காத்திருப்பு கொட்டகைகள் போன்ற சிறப்பு வசதிகளை ஏற்படுத்திட ரூபாய் 10 கோடி வழங்குவதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது. 

காவல் நிலையங்கள் நவீனமயம் ஆக்கப்படுவதோடு. அனைத்து தரப்பு மக்களும், குறிப்பாக மாற்றுத்திறனாளிகள், பெண்கள் மற்றும் வயதானவர்கள் அணுகக்கூடிய வகையிலும், பொதுமக்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்தும் இடமாகவும் காவல்நிலையங்கள் அமையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
முழு கட்டுரையைப் படிக்க →