காலில் காயத்துடன் காட்டு யானை: குப்பைகளை உண்ணும் அவலம்
ஒற்றைக் காட்டு யானையின் பின்னங்காலில் இடது காலில் ஏற்பட்டக் காயம் காரணமாக வனப்பகுதிகளில் உணவு உட்கொள்ள முடியாததால் ஆற்றோரத்தில் உள்ள குப்பைகளை உண்ணும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டம் பர்லியார் பகுதியில், ஒற்றைக் காட்டு யானையின் பின்னங்காலில் இடது காலில் ஏற்பட்டக் காயம் காரணமாக வனப்பகுதிகளில் உணவு உட்கொள்ள முடியாததால் ஆற்றோரத்தில் உள்ள குப்பைகளை உண்ணும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்தின் பலாபழம் சீசன் துவங்கியுள்ளதால் இவற்றை உண்பதற்காக மேட்டுப்பாளையம் வனப்பகுதியில் இருந்து 5க்கும் மேற்பட்ட யானைகள் மலைப் பகுதிக்கு வந்துள்ளன.
கூட்டத்தில் இருந்து பிரிந்து தனியாக சுற்றி வரும் ஒற்றை யானையின் பின்னங்காலில் இடது காலில் ஏற்பட்டுள்ள பிரச்னைக் காரணமாக, வனப்பகுதியில் உணவு தேடி செல்ல முடியாததால் ஆற்றோரத்தில் கொட்டப்பட்டுள்ள குப்பைகளை உணவாக உட்கொண்டு வருகிறது.
நடக்க சிரமப்பட்டுக் கொண்டிருக்கும் இந்த யானையை வனத்துறையினர் கண்காணித்து சிகிச்சை மேற்கொள்ள வன உயிரின ஆர்வலர்கள் எதிர்பார்கின்றனர்.
Advertisement
Advertisement
இதையும் படிக்க: முதல்வர் வருகை: திருச்சியில் ட்ரோன்கள் பறக்கத் தடை
இது குறித்து குன்னூர் வன சரகர் ரவீந்தர நாத்திடம் கேட்ட போது, எங்களது கவனத்திற்கு வரவில்லை என்றும் கண்காணித்து நடவடிக்கை எடுப்பதாகவும் கூறியுள்ளார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.