திமுக அமைச்சர்கள், நிர்வாகிகளின் சொத்து விவரங்கள் உள்ளிட்ட இரண்டாம் கட்டக் கோப்புகளை ஆளுநரிடம் வழங்கிய அண்ணாமலை.  
தமிழ்நாடு

திமுக ஃபைல்ஸ் 2: ஆளுநரிடம் வழங்கிய அண்ணாமலை!

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவியை மாநில பாஜக தலைவர் அண்ணாமலை சந்தித்துப் பேசினார். 

DIN

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவியை மாநில பாஜக தலைவர் அண்ணாமலை சந்தித்து திமுக நிர்வாகிகளின் சொத்து விவரங்கள் உள்ளிட்ட இரண்டாம் கட்ட கோப்புகளை வழங்கினார். 

சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் இந்த சந்திப்பானது நடைபெற்றது. 

சந்திப்பின்போது, திமுக அமைச்சர்கள், நிர்வாகிகளின் சொத்து விவரங்கள் உள்ளிட்ட இரண்டாம் கட்டக் கோப்புகளை ஆளுநரிடம் வழங்கினார் அண்ணாமலை. ரூ. 5,600 கோடி மதிப்பிலான ஊழல் விவரங்களையும் அளித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். 

இதுகுறித்து அண்ணாமலை தனது ட்விட்டரில், 'இன்று, பாஜக மூத்த தலைவர்களுடன், தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியைச் சந்தித்தோம்.

ஆளுநரிடம், திமுக அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் திமுக முதல் குடும்பத்துடன் தொடர்புள்ள பினாமி தகவல்கள் அடங்கிய, திமுக ஃபைல்ஸ் பகுதி 2 ஆவணங்களையும், மேலும், ரூ. 5,600 கோடி மதிப்பிலான 3 ஊழல் குறித்த ஆதாரங்களையும் வழங்கி, இது தொடர்பாக அவர் தலையிட்டு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கோரிக்கை விடுத்துள்ளோம்' என்று பதிவிட்டுள்ளார். 

திமுக அமைச்சர்கள், நிர்வாகிகளின் சொத்து விவரங்களை 'திமுக ஃபைல்ஸ் 2' என்ற பெயரில் ஜூலை இறுதிக்குள் வெளியிடுவதாக அண்ணாமலை கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. 

ஆளுநருடனான சந்திப்பின்போது பாஜக நிர்வாகிகள் கரு நாகராஜன், கராத்தே தியாகராஜன் மற்றும் பாஜக வழக்கறிஞர்கள் உடனிருந்தனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பனிமய மாதா போராலய திருவிழா: தூத்துக்குடியில் மீனவா்கள் கடலுக்குச் செல்லவில்லை

லாரி மோதி கல்லூரி மாணவா் உயிரிழப்பு

மாவட்ட ஹாக்கி போட்டி: கோவில்பட்டி வ.உ.சி. பள்ளி முதலிடம்

மத்திய அமைச்சா் நிதின் கட்கரி இல்லத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபா் கைது

தூத்துக்குடி விமான நிலையத்தில் போக்குவரத்து சேவை தொடக்கம்

SCROLL FOR NEXT