அடுத்த 3 மணிநேரத்தில் மழை பெய்யவுள்ள பகுதிகள்!
தமிழகத்தில் அடுத்த 3 மணிநேரத்துக்கு மழை பெய்யவுள்ள பகுதிகள் குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் அடுத்த 3 மணிநேரத்துக்கு மழை பெய்யவுள்ள பகுதிகள் குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த சில நாள்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னையிலும் கடந்த இரு நாள்களாக காற்றுடன் சாரல் மழை பெய்து வருகிறது.
படிக்க | 13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!
இந்நிலையில், தமிழகத்தில் திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் அடுத்த 3 மணிநேரத்துக்கு மழைபெய்யவுள்ள பகுதிகள் குறித்து வானிலை மையம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள சுட்டுரைப் பதிவில், மாதவரம், பூவிருந்தவல்லி, திருவள்ளூர், அம்பத்தூர், மாதவரம், அரக்கோணம், திருத்தணி ஆகிய பகுதிகளில் அடுத்த 3 மணி நேரத்திற்குள்ளாக மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.