தமிழ்நாடு

கார்கில் நாள்: திருச்சியில் முதல்வர் மு.க. ஸ்டாலின் மரியாதை

கார்கில் வெற்றி நாளையொட்டி திருச்சியில் கார்கில் வீரர் சரவணனின் நினைவுத் தூணுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். 

DIN

கார்கில் வெற்றி நாளையொட்டி திருச்சியில் கார்கில் வீரர் சரவணனின் நினைவுத் தூணுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். 

1999ல் காஷ்மீரின் கார்கில் பகுதிக்குள் பாகிஸ்தான் ராணுவத்தினர் ஊருடுவிய நிலையில், இந்திய ராணுவனத்தினருக்கும் பாகிஸ்தான் படையினருக்கும் 3 மாதங்களாக போர் நடைபெற்றதில் இந்தியா வெற்றி பெற்றது. போர் வெற்றி நாளான ஜூலை 26 'கார்கில் விஜய் திவாஸ்' என கடைப்பிடிக்கப்படுகிறது. 

கார்கில் வெற்றி நாளையொட்டி தலைவர்கள் பலரும் நினைவு கூர்ந்து பதிவிட்டு வருகின்றனர்.

இந்நிலையில் 2 நாள் பயணமாக திருச்சி வந்துள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், திருச்சி கண்டோன்மெண்ட் பகுதியில் உள்ள கார்கில் வீரர் சரவணனின் நினைவுத்தூணுக்கு மரியாதை செலுத்தினார். அமைச்சர்கள் துரைமுருகன், அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் உடனிருந்தனர். 

திருச்சி சமயபுரம் அருகே புறத்தாக்குடி கிராமத்தில் நடைபெற்று வரும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை முகாமை பார்வையிடும் முதல்வர் இன்று மாலை திருச்சியில் திமுக நிர்வாகிகளுடன் பயிற்சிப் பட்டறை நிகழ்வில் கலந்துகொள்கிறார். தொடர்ந்து நாளை திருச்சியில் நடைபெறும் வேளாண் கண்காட்சியில் பங்கேற்கிறார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வாசலிலே பூசணிப் பூ.. மார்கழி கோலத்தில் வைக்கும் பூ, தை மாத திருமணத்துக்கான அச்சாணியா?

பொங்கலுக்குப் பிறகு எங்களைப் பார்த்து நாடே வியக்கும்: செங்கோட்டையன் பேட்டி

கி.மு.1155ஆம் ஆண்டைய நெல்மணிகள்! சிவகளை அகழாய்வு பற்றி ஏ.வ. வேலுவுக்கு விளக்கிய தங்கம் தென்னரசு!!

சென்னை பிஎஸ்என்எல் அலுவலகத்தில் தீ விபத்து!

தொடர் நாயகன் வருண் சக்கரவர்த்தி பகிர்ந்த படையப்பா பாடல்!

SCROLL FOR NEXT