நடவு செய்யப்பட்ட வயலில் நெற்பயிர்களை அழித்து கால்வாய் வெட்டும் பணியை தொடங்கியுள்ள என்எல்சி நிர்வாகம்.  
தமிழ்நாடு

நடவு செய்யப்பட்ட வயலில் கால்வாய் வெட்டும் பணியை தொடங்கிய என்எல்சி: கிராம மக்கள்  எதிர்ப்பால் பதற்றம்

வளையமாதேவியில் நடவு செய்யப்பட்ட வயலில் சுரங்கத்திற்காக வாய்க்கால் அமைக்கும் பணிகளை என்எல்சி நிர்வாகம் தொடங்கியது. கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து பேராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் பதற்றம் நிலவி வருகிற

DIN


சிதம்பரம்: கடலூர் மாவட்டம் சேத்தியாதோப்பு அருகே வளையமாதேவியில் நடவு செய்யப்பட்ட வயலில் சுரங்கத்திற்காக வாய்க்கால் அமைக்கும் பணிகளை என்எல்சி நிர்வாகம் தொடங்கியது. கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து பேராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் பதற்றம் நிலவி வருகிறது. 

கடலூர் மாவட்டத்தில் என்எல்சி நிர்வாகம் சுரங்கம் விரிவாக்கத்திற்காக நிலங்கள் கையகப்படுத்தியது. கையகப்படுத்திய நிலத்தின் உரிமையாளர்களுக்கு ஏக்கருக்கு ரூ.6 லட்சம் கொடுத்துள்ளது. ஆனால் நிலங்களில் சுரங்க விரிவாக்க பணிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

இந்த நிலையில், சேத்தியாதோப்பு அருகே வளையமாதேவியில் நடவு செய்யப்பட்ட வயலில் சுரங்கத்திற்காக வாய்க்கால் அமைக்கும் பணி மற்றும் கால்வாய் வெட்டும் பணி 30-க்கும் மேற்பட்ட ஜேசிபி இயந்திரங்கள் மூலம் புதன்கிழமை காலை தொடங்கியது. இன்னும்  2 மாதத்திற்குள் நடவு செய்யப்பட்ட நெற்பயிர்கள் அறுவடை செய்யவுள்ள நிலையில், நெற்பயிர்கள் அழிக்கப்பட்டு கால்வாய் மற்றும் வாய்க்கால் அமைக்கும் பணி தொடங்கி உள்ளதற்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து பேராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் பதற்றம் நிலவி வருகிறது. 

கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர், விழுப்புரம் சரக டி.ஐ.ஜி தலைமையில் 400க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.

இதனால் சேத்தியாதோப்பு, வளையமாதேவி பகுதியில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மனநிம்மதி இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

புதுகை ஆட்சியரகத்தில் விவசாயி தற்கொலை முயற்சி

வடகவுஞ்சி கிராமத்தில் வனத்துறை விதித்த கட்டுப்பாடுகளுக்கு பொதுமக்கள் எதிா்ப்பு

ஆன்லைன் வா்த்தக மோசடி மூலம் ரூ.11 லட்சம் கொள்ளை: 2 போ் கைது

சரக்கு வேன் கவிழ்ந்து ஓட்டுநா் உயிரிழப்பு

SCROLL FOR NEXT