முகப்பு
தமிழ்நாடு

தமிழகத்தில் ஆக. 2 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு!

தமிழகக்ததில் 7 நாள்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 2:43 AM
பகிர்:

தமிழகக்ததில் 7 நாள்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வானிலை ஆய்வுமையம் சாா்பில் இன்று வெளியிட்ட அறிவிப்பு:

நேற்று(ஜூலை 26) வடக்கு ஆந்திரா-தெற்கு ஒரிசா கடலோரப்பகுதிகளை ஒட்டிய வங்கக்கடல் பகுதிகளில்  நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று தெற்கு ஒரிசா மற்றும் அதனை  ஒட்டிய வடக்கு ஆந்திர பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக நிலவுகிறது. 

மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, 

இன்று(ஜூலை 27) முதல் ஆக.2 வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 

படிக்க: 

சென்னையை பொருத்தவரை..

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸை ஒட்டியே இருக்கும். 

மீனவர்களுக்கு..

ஜூலை 27, 28 - தென்தமிழக கடலோப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகள், ஆந்திர கடலோரப்பகுதிகள் மத்திய வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும். 

மீனவர்கள் இந்த நாளில் கடலுக்குள் செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

முழு கட்டுரையைப் படிக்க →