தமிழ்நாடு

அண்ணாமலை நடைப்பயணத்தில் தேமுதிக பங்கேற்பு!

தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையின் நடைப்பயணத்தில் தேமுதிக பங்கேற்கவிருப்பதாக அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார். 

DIN

தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையின் நடைப்பயணத்தில் தேமுதிக பங்கேற்கவிருப்பதாக அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார். 

‘என் மண், என் மக்கள்’ என்ற பெயரில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை இன்று(ஜூலை 28) மாலை ராமேசுவரத்தில் தனது நடைப்பயணத்தைத் தொடங்குகிறார். ராமேசுவரத்தில் தேசிய நெடுஞ்சாலையில் அமைக்கப்பட்டுள்ள மேடையிலிருந்தவாறு மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா கொடியசைத்து இந்த நடைபயணத்தைத் தொடக்கி வைக்கிறாா். 

இந்த நடைபயண தொடக்க நிகழ்ச்சிக்கு தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள அனைத்துக் கட்சிகளுக்கும் அழைப்பிதழ் கொடுக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் தேமுதிக இந்த நடைப்பயணத்தில் பங்கேறவிருக்கிறது. இதுகுறித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில், 'பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ராமேசுவரத்தில் இருந்து இன்று நடைபயணம் தொடங்குகிறார். அவர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆதரவு கோரினார். மாநில துணை செயலாளர் கரு. நாகராஜன் நேரடியாக வந்து அழைப்பிதழை வழங்கினார்.

மரியாதை நிமித்தமாக தேமுதிக சார்பில், ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் சிங்கை ஜின்னா மற்றும் கழகத்தினர், இந்த நடைபயண துவக்க விழாவில் கலந்துகொள்கிறார்கள். அவரது நடைபயணம் வெற்றி பெற எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்' என்று பதிவிட்டுள்ளார். 

மக்களவைத் தோ்தலில் யாருடன் கூட்டணி என்பது குறித்து பின்னரே முடிவெடுக்கப்படும் என சில தினங்களுக்கு முன்பு  தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறிய நிலையில்,  தற்போது அண்ணாமலை நடைப்பயணத்தில் பங்கேற்பது பாஜக கூட்டணியில் தேமுதிக இருக்கலாம் என்று பேசப்படுகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஓபிஎஸ் குற்றச்சாட்டுக்கு நயினார் நாகேந்திரன் மறுப்பு!

முதலாமாண்டு பொறியியல் வகுப்புகள் ஆக. 11-ல் தொடக்கம்: அண்ணா பல்கலை. அறிவிப்பு!

முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவிடம் நோக்கி ஆகஸ்ட் 7-ல் அமைதிப் பேரணி!

சொல்லப் போனால்... பஹல்காமிலிருந்து லெவல் கிராசிங் வரை...

தமிழகத்துக்கு மின்-பேருந்துகள்: டாடா மோட்டாா்ஸ் ஒப்பந்தம்

SCROLL FOR NEXT