தமிழ்நாடு

கிருஷ்ணகிரி பட்டாசு கடை தீ விபத்து: பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு

கிருஷ்ணகிரியில் தனியார் பட்டாசு கடையில் சனிக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது. பலி எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது. 

DIN


கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் தனியார் பட்டாசு கடையில் சனிக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது. பலி எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது. 

கிருஷ்ணகிரி பழையபேட்டை முருகன் கோயில் செல்லும் சாலையில் உள்ள தனியார் பட்டாசு கடையில் சனிக்கிழமை பயங்கர சத்தத்துடன் பட்டாசுகள் வெடித்து சிதறின. இதில் முதலில் 4 பேர் பலியாகினர், 5 பேர் காயமடைந்தனர். பட்டாசுகள் வெடித்துச் சிதறியதில் அருகில் உள்ள வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும்,  பட்டாசு வெடி விபத்தில் பலத்த காயமடைந்த அனைவரும் கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று தகவல்கள் வெளியானது. 

இந்த நிலையில், பட்டாசு கடை தீ விபத்தில் சிக்கி காயமடைந்தவர்களில் 3 பேர் இறந்துள்ளனர். இதையடுத்து பலியானோரின் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது.

தீ விபத்தில் ரவி, ஜெய்ஸ்ரீ, ருத்திகா, ருதிஷ், ராஜேஸ்வரி, இப்ராகிம், இம்ரான் ஆகியோர் இறந்துள்ளனர். பலி எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.

கிருஷ்ணகிரி தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் தீயணைக்கும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மோடிக்காக கார் ஓட்டுநராக மாறி இன்ப அதிர்ச்சியளித்த எத்தியோப்பிய பிரதமர்!

எத்தியோப்பியாவில் பிரதமர் மோடி! பிரதமர் அபி அகமது அலியுடன் சந்திப்பு!

ஈரோட்டில் நடைபெறும் விஜய் பிரசாரக் கூட்ட முன்னேற்பாடுகள் குறித்து Sengottaiyan!

சிஎஸ்கேவில் இணைந்த ராகுல் சஹார்!

முழு கொள்ளளவை எட்டிய செம்பரம்பாக்கம் ஏரி - உபரி நீர் திறப்பு அதிகரிப்பு!

SCROLL FOR NEXT